தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bjp: ’2024ஆம் ஆண்டுக்கு பிறகு வடகொரியாவாக இந்தியா மாறும்’ எச்சரிக்கும் உத்தவ் தாக்ரே

BJP: ’2024ஆம் ஆண்டுக்கு பிறகு வடகொரியாவாக இந்தியா மாறும்’ எச்சரிக்கும் உத்தவ் தாக்ரே

Kathiravan V HT Tamil
Jul 10, 2023 10:51 PM IST

மகாராஷ்டிராவில் மோடியின் பெயர் வேலை செய்யாது என்று தெரிந்ததும் சிலர் பால்தாக்ரே பெயரை பயன்படுத்துவதாக சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

நாக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசும் உத்தவ் தாக்ரே
நாக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசும் உத்தவ் தாக்ரே (Snehal Sontakke)

ட்ரெண்டிங் செய்திகள்

உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜகவும் அதன் தலைவர் மோடியும் கர்நாடகாவில் நடந்த தேர்தலில் பஜ்ரங் பலி என்று கூறி வாக்கு கேட்டது பலனளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்று பிரதமர் மோடி கூறியநிலையில் தற்போது அக்கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இணைத்துக் கொண்டதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியை ஊழல் ஜனதா கட்சி என்று அழைக்க வேண்டும் என்று கூறினார்.

குஜராத்தில் கடந்த ஆண்டு 40 ஆயிரம் சிறுமிகள் காணமால் போனதாக NCRP அறிக்கை கூறுகிறது ஆனால் பிரதமர் மோடி தனது சொன்ன மாநிலத்திற்கு செல்லும் போது சிறுமிகள் மேம்பாட்டுக்கான முயற்சிகளில் முதலீடு செய்வது பற்றி பேசுவதாகவும் கூறிய தாக்ரே, நாடு முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பாஜக திணித்துள்ளதாக கூறினார்.

மக்கள் இப்போது பேசாவிட்டால் 2024ஆம் ஆண்டுக்கு பிறகு எங்களால் பேச முடியாது என்றும் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற சர்வாதிகாரத்தை நோக்கி நம் நாடு நகர்வதாகவும் கூறினார்.

இரட்டை எஞ்சின் அரசு மணிப்பூரில் ஏன் எரிகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி உடன் இனி கைகோர்க்க போவதில்லை என்று கூறிய பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் ஆடியோ க்ளிப்பை இயக்கி காட்டி விமர்சித்த

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்