AIADMK Candidate List : நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!
AIADMK Candidates Announcement : 17 பேர் கொண்ட அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் நேற்று இபிஎஸ் அறிவித்தார். அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், எஸ் டி பி ஐ, ஃபார்வேர்ட் பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதன்படி 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறித்தார்.அதில்,
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
வடசென்னை - ராயபுரம் மனோ
தென்சென்னை - ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் - பாக்யராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் - சந்திரஹாசன்
நாகை - சுர்ஜித் சங்கர்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார். அதன்படி,
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார்
வேலூர் - பசுபதி
தருமபுரி - அசோகன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - அருணாச்சலம்
நீலகிரி - தமிழ்செல்வன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோன்
மயிலாடுதுறை - பாபு
சிவகங்கை - பனங்குடி சேவியர்தாஸ்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி - முத்துச்சோழன்
கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிகவுக்கு 5 தொகுதி
அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் மற்றும் எஸ் டி பி ஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. எஸ்டிபிஐக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில் நேற்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக இபிஎஸ் அறிவித்தார். அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.
1.திருவள்ளூர் (தனி)
2.மத்திய சென்னை
3.கடலூர்
4.தஞ்சாவூர்
5.விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.