Tamilisai Soundararajan: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை போட்டியிட போகும் தொகுதி எது தெரியுமா? இதோ விவரம்!
- மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக சார்பில் ஜெயிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் பதவி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது.
- மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக சார்பில் ஜெயிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் பதவி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது.
(1 / 7)
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி உள்ளார். (HT_PRINT)
(2 / 7)
புதுச்சேரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக முதலில் கூறப்பட்டது.
(3 / 7)
ஆனால் தற்போது புதுச்சேரியில் போட்டியிடவில்லை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொகுதியில்தான் போட்டியிட உள்ளேன். இது குறித்த அறிவிப்பை கட்சித் தலைமை அறிவிக்கும் என தமிழிசை சௌந்தராஜன் கூறி உள்ளார்,
(4 / 7)
தென் சென்னை மக்களவை தொகுதி அவருக்கு சாதகமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2011ஆம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு தனது இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிலும் போட்டியிட்ட அனுபவம் தமிழிசைக்கு உள்ளது. அதுமட்டுமின்றி மயிலாப்பூர், தி.நகரில் உள்ள பிராமணர்களில் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் பட்சத்தில் வெற்றி இலக்கை அடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் தமிழிசையின் கவனம் தென் மாவட்டங்களை நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
(5 / 7)
கன்னியாகுமரியை பொறுத்தவரை அத்தொகுதி தமிழிசை சவுந்தராஜனின் பூர்வீக தொகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது. அத்தொகுதில் ஏற்கெனவே மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படும் நிலையில் தமிழிசை பெயரும் அடிபடத் தொடங்கி உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவியை தர பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
(6 / 7)
அல்லது அதற்கு மாற்றாக நெல்லை தொகுதியில் தமிழிசை போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழிசை சௌந்தராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருந்தார். மேலும் நெல்லை எம்.எல்.ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன் எம்.பிக்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வென்றால் இடைத் தேர்தல் வரும் என்பதால் அவருக்கு பதிலாக தமிழிசையை வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. (PTI)
(7 / 7)
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக சார்பில் ஜெயிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் பதவி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாஜக சார்பில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது. (PTI)
மற்ற கேலரிக்கள்