தமிழ் செய்திகள்  /  Elections  /  Second Phase Of Alliance Talks Between Aiadmk-dmdk Parties Regarding The Parliamentary Elections 2024

ADMK DMDK Allaiance: ’அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை இறுதி செய்த தேமுதிக’ ஆனால் அங்கதான் ட்விஸ்டே!

Kathiravan V HT Tamil
Mar 06, 2024 07:36 PM IST

“வடசென்னை தொகுதிக்குப் பதில் வேறு தொகுதியை ஒதுக்குமாறு அதிமுகவுடன் தேமுதிக குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது”

அதிமுக - தேமுதிக இடையே இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது
அதிமுக - தேமுதிக இடையே இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக-அதிமுக கட்சிகள் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் அதிமுக உடன் தேமுதிக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரும், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் ஆகியோரும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு தேமுதிக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர், அதிமுகவின் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவினர் உடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 

இதில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த போது தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் வடசென்னை தொகுதிக்குப் பதில் வேறு தொகுதியை ஒதுக்குமாறு அதிமுகவுடன் தேமுதிக குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. 

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தது. இருவரது கருத்துகளை நட்புணர்வோடு பகிர்ந்து கொண்டோம். அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளது, மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை தொடரும். அண்ணியார் அவர்களிடம் எங்கள் கருத்துகளை தெரிவிப்போம் என கூறினார்.

WhatsApp channel