தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Asia Cup 2023: அடி மேல் அடி! தலைவலியை ஏற்படுத்தும் வீரர்களின் காயம் - சிஎஸ்கே வீரரை நம்பி இருக்கும் இலங்கை அணி

Asia Cup 2023: அடி மேல் அடி! தலைவலியை ஏற்படுத்தும் வீரர்களின் காயம் - சிஎஸ்கே வீரரை நம்பி இருக்கும் இலங்கை அணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2023 11:51 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் மூன்றாவது வீரராக அணியின் வேகப்பந்து வீச்சாளர் காயமடைந்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளான இரண்டு வீரர்களும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

பயிற்சியின்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா
பயிற்சியின்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே இலங்கை அணியின் பிரதான ஸ்பின்னரான ஹசரங்கா தொடையில் காயம், வேகப்பந்து வீச்சாளர் சமீரா தோல்பட்டையில் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க போவதில்லை என கூறப்படுகிறது.

தற்போது இந்த லிஸ்டில் இலங்கைய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவும் இணைந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா தசை கிழிவு காரணமாக காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் ஆசிய கோப்பை விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காயத்தால் சிகிச்சை பெற்று வந்த லஹிருா குமார குணமடைந்த போதிலும், முழுமையான பிட்னஸ் பெறாத காரணத்தால் அவராலும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்டார் பேட்ஸ்மேன்களான குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அணியில் மூன்றாவது வீரராக மதுஷங்கா காயமடைந்திருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இவர்களுடன் ஸ்பின்னரான ஹசரங்கா, லஹிருமா குமாரா, சமீரா, மதுஷங்கா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இல்லாத நிலையில், அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ஸ்ரீ கசுன் ராஜிதா, பிரமோத் மதுஷன் மற்றும் மதீஷ பத்திரனா ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் மதீஷ பத்திரனா, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து அணியின் முக்கிய பவுலராக ஜொலித்தார். எனவே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் தனது திறமையை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point