தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Nep: தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கண்கலங்கிய இந்திய இளம் வீரர்!

IND VS NEP: தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கண்கலங்கிய இந்திய இளம் வீரர்!

Manigandan K T HT Tamil
Oct 03, 2023 09:16 AM IST

முதல் போட்டி என்பதால் உணர்ச்சிவசப்பட்டார். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டு அவர் கண் கலங்கியதை பார்க்க முடிந்தது.

கண்கலங்கிய சாய் கிஷோர்
கண்கலங்கிய சாய் கிஷோர் (@CricCrazyJohns)

ட்ரெண்டிங் செய்திகள்

டாஸ் ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை இந்தியா பதிவு செய்தது.

முன்னதாக, தேசிய கீதம் இசைக்கும் போது கண்கலங்கினார் சாய் கிஷோர். இவர் சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்த இவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல் போட்டி என்பதால் உணர்ச்சிவசப்பட்டார். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டு அவர் கண் கலங்கியதை பார்க்க முடிந்தது.

நேபாளம் பேட்டிங் செய்த போது அவருக்கு விக்கெட் கிடைத்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த டி20 பவுலர்களில் ஒருவரான சாய் கிஷோருக்கு இது முதல் சர்வதேச விக்கெட் ஆகும்.

அவர் விக்கெட்டை தூக்கியதும் சக வீரர்கள் அவரை பாராட்டினார்.

சரியாக காலை 6.30 மணிக்கு ஹாங்ஜோவில் போட்டித் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 3 சிக்ஸர்களை விளாசினார். ருதுராஜும் அவருக்கு தோள் கொடுத்து வருகிறார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இது அவருக்கு முதல் டி20 சதம் ஆகும்.

ருதுராஜ் கெய்ஸ்வாட் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த திலக் வர்மா 2 ரன்களில் நடையைக் கட்டினார். அதைத் தொடர்ந்து வந்த ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்தார். திபேந்திர சிங் பந்துவீச்சில் கேட்ச் ஆனார் ஜெய்ஸ்வால். ரிங்கு சிங், ஷிவம் துபே அதிரடி காட்டினர்.

ரிங்கு சிங் 37 ரன்களும், ஷிவம் துபே 25 ரன்களும் விளாசினர். 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

நேபாளம் 120 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். மிக இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் யஷஸ்வி தான்.

இதுவே அவருக்கு முதல் டி20 சதம் ஆகும். மேலும், 49 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காண்பித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

நேபாளத்திற்கு எதிரான கடைசி ஓவரில் 6, 6, 4, 1, 6, கடினமான ஆடுகளத்தில் நம்பமுடியாத பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ரிங்கு சிங் 15 பந்துகளில் 37* ரன்கள் குவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point