தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Boxing Day Test: ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் என்றால் என்ன?

Boxing Day Test: ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் என்றால் என்ன?

Manigandan K T HT Tamil
Dec 25, 2023 12:33 PM IST

IND vs SA: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணியும் நாளை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதுவும் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றே அழைக்கப்படுகிறது. சென்சூரியனில் இப்போட்டி நடைபெறுகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன என பார்ப்போம்
பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன என பார்ப்போம் (x)

ட்ரெண்டிங் செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மேலை நாடுகளில் தேவாலயங்கள் முன் பெரிய பாக்ஸ் ஒன்று வைக்கப்படுவது வழக்கம். அதில் சேரும் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கிறிஸ்துமஸுக்கு மறுநாள் அதாவது டிசம்பர் 26ம் தேதி பிரித்து ஏழைகளுக்கு கொடுக்கும் முறை இருந்து வருகிறது.

அன்றைய தினத்தில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் நடத்துவது வழக்கமானது. இதையொட்டி அதை பாரம்பரியமாக ஆஸ்திரேலியா நடத்தியும் வருகிறது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ஏதோ ஒரு நாட்டு அணியுடன் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருக்கும்.

அந்த வகையில் இந்தமுறை பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி மட்டுமல்லாமல் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணியும் நாளை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதுவும் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றே அழைக்கப்படுகிறது. சென்சூரியனில் இப்போட்டி நடைபெறுகிறது.

இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படாத பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பிளேயிங் XI: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்.

இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தானும் அறிவித்தது. வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார், அதே நேரத்தில் பெர்த்தில் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரப்பும் வெளியேறுகிறார். இதுதவிர சர்ஃபராஸும் பிளேயிங் லெவனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளார்.

பெர்த் டெஸ்டில் அவர் சந்தித்த மோசமான ஆட்டத்திற்கு பிறகு சர்ஃபராஸ் அகமது இரண்டாவது டெஸ்டில் ஓரங்கப்பட்டுள்ளார். இது பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும்.

IPL_Entry_Point