MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான ஒரு ரெகார்டை வைத்திருக்கும் ‘தல’ தோனி.. அது என்னன்னு பாருங்க!-thala dhoni holds a unique record in the history of ipl cricket read more details to know - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ms Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான ஒரு ரெகார்டை வைத்திருக்கும் ‘தல’ தோனி.. அது என்னன்னு பாருங்க!

MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான ஒரு ரெகார்டை வைத்திருக்கும் ‘தல’ தோனி.. அது என்னன்னு பாருங்க!

Manigandan K T HT Tamil
Mar 20, 2024 09:55 AM IST

CSK captain MS Dhoni record: கேப்டன் தோனிக்கு, அவரது உடற்தகுதி பிரச்சினைகள் இருந்தபோதிலும், கடந்த சீசனில் குறப்பிடத்தக்க தாக்கத்தை அணியில் ஏற்படுத்தினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி, தோனியின் 250வது போட்டியாக அமைந்தது.

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி (HT)

ஐபிஎல் 2023 சீசனில், தோனி மிகக் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களை எடுத்தார். இந்த ஐபிஎல் எடிஷனுக்கு முன்பு, சராசரியாக, அவர் ஒரு சீசனில் 253 பந்துகளை எதிர்கொண்டு 331 ரன்கள் எடுத்தார். எண்களை கணக்கில் எடுத்தால், 2023 இல், அவர் பந்துகளில் கால் பகுதியை மட்டுமே எதிர்கொண்டார் மற்றும் அவரது முந்தைய சராசரிகளுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு ரன்களை மட்டுமே எடுத்தார்.

சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சீரானதாக இருந்ததால், இது தோனிக்கு குறைந்த பந்துகளை எதிர்கொள்ள வழிவகுத்தது. கேப்டன் தோனிக்கு, அவரது உடற்தகுதி பிரச்சினைகள் இருந்தபோதிலும், கடந்த சீசனில் குறப்பிடத்தக்க தாக்கத்தை அணியில் ஏற்படுத்தினார். இந்த பந்துகளில் 95 சதவீதம் 17 மற்றும் 20 ஓவர்களுக்கு இடைப்பட்டவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி, ஐபிஎல் வரலாற்றில் தோனியின் 250வது போட்டியாக அமைந்தது. இதன் மூலம் ஐபிஎல்லில் இந்த சாதனையை படைத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவரது புகழ்பெற்ற ஐபிஎல் வாழ்க்கையில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளைத் தவிர, தோனி பெரும்பாலும் சிஎஸ்கே அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அந்த காலகட்டத்தில், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடினார்.

தோனி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெறும் லீக் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதும்போது, அவர் களமிறங்கி கலக்குவார் என்று நம்பலாம். ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு, அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடற்தகுதி மற்றும் மறுபிரவேசம் குறித்த அனைத்து நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், 42 வயதான அவர் CSK முகாமில் சேர்ந்துள்ளார். நடப்பு சாம்பியனுக்காக இந்த சீசனில் அவர் வகிக்கும் பாத்திரத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

தோனியின் ஆல் டைம் ஐபிஎல் சாதனைகள்

போட்டிகள்: 250 போட்டிகள் (யாரும் நிகழ்த்தாத சாதனை)

பேட்டிங் சாதனை: 136 ஸ்ட்ரைக் ரேட்டில் 5,082 ரன்கள்

ஃபீல்டிங் சாதனை: 142 கேட்ச்கள் மற்றும் 42 ஸ்டம்பிங்

ஐபிஎல் கேப்டன்சி சாதனை: 226 போட்டிகளில் இருந்து 133 வெற்றிகள் (ஒரு கேப்டனுக்கு அதிகம்); 91 தோல்விகள்

கேப்டனாக தோனியின் வெற்றி/தோல்வி விகிதம்: 1.461

ஐபிஎல் சாம்பியன் பட்டங்கள்: 5

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.