IPL 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?-ms dhonis cryptic new season new role ipl post adds suspense to csk future - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ipl 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?

IPL 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?

Kathiravan V HT Tamil
Mar 04, 2024 08:31 PM IST

ஐபிஎல் 2024க்கு முன்னதாக தனது சமூக ஊடக இடைவெளியை முடித்துக் கொண்டு, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ஃபேஸ்புக்கில் ஒரு கண்கவர் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி (ANI)

42 வயதான முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிகரமான சீசனைத் தொடர்ந்து இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி கிரிக்கெட்டில் இருந்து முழு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோனி மீண்டும் கேப்டனாக வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எம்.எஸ்.தோனியின் சமூகவலைத்தள பதிவு புதிய ஊகங்களை தூண்டுவதாக உள்ளது.

"புதிய சீசன் மற்றும் புதிய 'பாத்திரத்திற்காக காத்திருக்க முடியாது. காத்திருங்கள்" என்று எம்.எஸ்.தோனி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் தோனி இந்த பதிவை இட்டுள்ளார். 

தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் பலர் ஏற்கனவே பயிற்சியை ஆரம்பித்துள்ள சென்னையில் நடைபெற்று வரும் சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு தோனி இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி வகிகப்போகும் புதிய பாத்திரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது என்றாலும், சிஎஸ்கே ரசிகர்கள் இது தலைமை மாற்றத்துடன் தொடர்புடையது அல்ல என்று நம்புகிறார்கள். 

ஐபிஎல் போட்டிக்கான வலைகளில் பயிற்சிகளை தோனி ஏற்கனவே தொடங்கி உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி, ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் ஆக்கினார். 

அவரது ஜடேவின் கேப்டன் ஷிப்பில் சிஎஸ்கே தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களை இழந்ததால் தோனி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். 

250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள, தோனி ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் ஆவார். தொடக்கத்தில் இருந்தே கேப்டனாக இருந்த ஒரே வீரரான அவர், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே இரண்டு ஆண்டு தடைக்கு ஆளான பிறகு, ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்கு தோனி செல்ல வேண்டியிருந்தது.  ஆனால் தடை நீக்கப்பட்டதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் கேப்டனாக செயல்பட்டார்.  

ஐபிஎல் 2024க்கு ஷர்துல் மற்றும் ரச்சினை தோனியின் சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே புதிய சீசனுக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார்களான பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பதி ராயுடு மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோரை விடுவித்தது. ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திரா (ரூ. 1.8 கோடி), ஷர்துல் தாக்குர் (ரூ. 4 கோடி), டேரில் மிட்செல் (ரூ. 14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ. 8.40 கோடி), முஸ்தாபிசூர் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. 

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.