தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shaitaan Movie Box Office Collection On Day 10 Of Release

Shaitaan Box Office: தூள் கிளப்பிய மாதவன்.. திகில் கிளப்பும் ஷைத்தான்.. 10 நாளில் அபார வசூல் சாதனை!

Aarthi Balaji HT Tamil
Mar 18, 2024 07:45 AM IST

Shaitaan Box Office Collection: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்த, ஷைத்தான் படம் 10 நாளில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஷைத்தான்
ஷைத்தான்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் நாள் முதல் ஷோவிலேயே படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வருவதால், பாக்ஸ் ஆபிஸை நோக்கி விரைகிறது ஷைத்தான்.

ஷைத்தான் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் போக்குகளைக் கண்காணிக்கும் Sacnilk.com படி, ஷைத்தான் திரைப்படம் அதன் இரண்டாவது வார இறுதியில் இந்தியாவில் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது.

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் ஷைத்தான் திரைப்படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இப்படம் ரூ.9.75 கோடி வசூல் செய்தது. உண்மையில், முதல் வார இறுதியை விட இரண்டாவது வார இறுதியில் ஷைத்தான் வசூல் அதிகமாகி இருக்கிறது.

9 ஆவது நாள் வரை இந்திய அளவில் ரூ.93.57 கோடி வசூலித்த ஷைத்தான், பத்தாவது நாளில் ரூ.100 கோடியை எட்டியது. தற்போது பத்து நாட்களில் ரூ.103.05 கோடிகளை வசூலித்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமை வடக்கு பெல்ட்டில் 37.19 சதவீத ஆக்கிரமிப்பு எட்டப்பட்டது. இந்த படத்தின் உண்மையான சோதனை இரண்டாவது திங்கட்கிழமை (மார்ச் 18) முதல் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷைத்தான் பட கதை என்ன?

சைத்தான் படத்தை விகாட் பால் இயக்கி உள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ், தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளன.

இதில் நடித்த அஜய் தேவ்கனும் தயாரிப்பாளர்களில் ஒருவர். அமானுஷ்ய சக்திகளைக் கொண்ட ஒரு மனிதன் ஒரு குடும்பத்தை தங்கள் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான். இந்த சாத்தான் அவர்கள் சுற்றி வரும் கதை.

இப்படத்தில் அஜய் தேவ்கனும், ஜோதிகாவும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். மேலும் மாதவன் அமானுஷ்ய சக்தி கொண்டவராக நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் ரசித்து இருக்கிறார்கள். சைத்தான் திரைப்படம் 2023 இல் குஜராத்தி திரைப்படமான வாஷ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை கிருஷ்ணதேவ் யாக்னிக் இயக்கியுள்ளார்.

இந்த ஆண்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த மூன்றாவது படம் ஷைத்தான். ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்த ஃபைட்டர், ஷாஹித் கபூர், கிருத்தி சனோன் நடித்த தாதி பாத்தோ மே ஐசா உல்ஜா ஜியா ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளன. ஷைத்தான் திரைப்படம் முதல் நாளிலேயே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக மாதவனின் நடிப்பு படத்தின் ஹைலைட், அவருக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

ஷைத்தான் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 14.50 கோடி வசூல் செய்து உள்ளது. கடந்த காலத்தில், பாலிவுட்டில் அதிக வசூல் செய்த திகில் படமாக ராஜ் 3 சாதனை படைத்தது. இம்ரான் ஹாஷ்மி மற்றும் பிபாஷா பாசு கதாநாயகிகளாக நடித்த இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகி 10.33 கோடிகளை வசூலித்தது. 12 வருட சாதனையை சாத்தான் முறியடித்து இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்