“துப்பாக்கிய புடிங்க வாஷி.." அந்த 2 நிமிட பேச்சு.. தி கோட் ஸ்டைலில் வாஷிங்டன் சுந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்த அஸ்வின்
தி கோட் பட ஸ்டைலில் துப்பாக்கிய புடிங்க வாஷி என இந்திய அணியில் தான் வகித்த பொறுப்பை, இளம் ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரிடம் ஒப்படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நீண்ட காலமாக இந்திய அணியில் பயணித்து வரும் சீனியர் வீரராக இருந்து வந்த அவரை மிஸ் செய்வதாக சக வீரர்கள் தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த மற்றொரு ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் வருகையும், அஸ்வினின் ஓய்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற ரசிகர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்தனர். இதற்கிடையே அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார் வாஷிங்டன் சுந்தர்.
அதில், "ஒரு சக அணி வீரராக இல்லாமல், அஸ்வின் அண்ணா மிக சிறந்த முன்மாதிரி, வழிகாட்டி, கிரிக்கெட்டில் உண்மையான சாம்பியனாக இருந்துள்ளார்.
