“என் கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த அனைத்தையும் நீக்கிய குடும்பத்தினர்..” இந்திய கிரிக்கெட்டின் தி கோட் அஸ்வின் எமோஷனல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “என் கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த அனைத்தையும் நீக்கிய குடும்பத்தினர்..” இந்திய கிரிக்கெட்டின் தி கோட் அஸ்வின் எமோஷனல்

“என் கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த அனைத்தையும் நீக்கிய குடும்பத்தினர்..” இந்திய கிரிக்கெட்டின் தி கோட் அஸ்வின் எமோஷனல்

Dec 19, 2024 12:34 AM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 19, 2024 12:34 AM , IST

  • பிரிஸ்பேன் டெஸ்டின் ஐந்தாவது நாளில் தேநீர் இடைவேளைக்குப் பின் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தருணத்தை உருவாக்கிவிட்டால் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய கிரிக்கெட் தி கோட் ஆக கடந்த 14 ஆண்டுகள் வலம் வந்த அஸ்வின் சர்வதேச கிர்க்கெட்டில் விடைபெற்றுவிட்டார்

எனது குடும்பமும் கிரிக்கெட்டையும், எனது வாழ்க்கையை எளிதாக்க கட்டமைக்க உதவினர். இது அவர்களுக்கு மிகவும் கடினமான பயணமாகவே இருந்தது. உணர்வு ரீதியாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய பெரிய ரோலர்கோஸ்டராக என கிரிக்கெட் பயணம் இருந்தது என தனது குடும்பத்தினரிடம் கிடைத்த ஆதரவு பற்றி அஸ்வின் கூறியுள்ளார்

(1 / 9)

கோலியுடனான கலந்துரையாடலுக்கு பின், போட்டி முடிவடைந்த பின் இது தான் சர்வதேச கிரிக்கெட்டில் எனது கடைசி நாள் என முறையாக அஸ்வினின் ஓய்வு அறிவிப்பையும் அவரே வெளிப்படுத்தினார். அத்துடன் அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்புகிறார்

(2 / 9)

நான் எனது முப்பதுகளின் இரண்டாம் பாதியில் இருக்கிறேன், எனது முதல் சர்வதேச ஆட்டத்தைப் பார்ப்பது போல் என் அப்பா இன்னும் விளையாட்டைப் பார்க்கிறார். என் கிரிக்கெட் பயணத்தில் குறுக்கே வரும் எதையும் நீக்கி குடும்பத்தின் முக்கிய பங்கு வகித்தனர். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் ஒரே நோக்கமாக இருந்துள்ளது

(3 / 9)

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது தாயாருக்கு உடல்நிலை சரி இல்லாததால் பாதியிலேயே திரும்பினேன். அப்போது,  "நான் இறங்கி மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​​​என் அம்மா சுயநினைவை விட்டு நழுவிக்கொண்டிருந்தார், அவள் என்னிடம் முதலில் கேட்டது, "நீ ஏன் இங்கு வந்தாய்" என்றதுதான் என குடும்பத்தினர் தனக்கும், தனது கிரிக்கெட்டுக்கும் அளித்த ஆதரவு பற்றி அஸ்வின் எமோஷனலாக பேசியுள்ளார்

(4 / 9)

அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் ஹோம் மேக்கராக உள்ளார். பயிற்சி பெற்ற கிளாசிக் டான்ஸராகவும் உள்ளார். அஸ்வின் - ப்ரீத்தி நாராயணன் இடையிலான வாழ்க்கை பயணம் பள்ளி வாழ்க்கையிலேயே தொடங்கியுள்ளது. 

(5 / 9)

அஸ்வினுக்கு அகிரா, ஆத்யா என இரு மகள்கள் உள்ளார்கள். அகிரா 2014இல் பிறந்தார். இரண்டாவது மகளான ஆத்யா 2016இல் பிறந்தார்

(6 / 9)

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக மொத்தம் 116 ஒரு நாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். பேட்டிங்கை பொறுத்தவரை 63 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 707 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு அரைசதம் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 65 ரன்கள் ஆகும்

(7 / 9)

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக மொத்தம் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 65 இன்னிங்ஸ்களில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சு. பேட்டிங்கை பொறுத்தவரை 19 இன்னிங்ஸ்களில் 184 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் அவுட்டாகமல் 31 ரன்கள் எடுத்தது ஆகும்

(8 / 9)

காபா டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு மழை காரணமாக உடனடியாக ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. அப்போது, ​​டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலிக்கு அருகில் அஸ்வின் அமர்ந்து தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தார். விவாதத்தின் போது, ​​விராட் ஒருமுறை அஸ்வினை உணர்ச்சியுடன் கட்டிப்பிடித்தார். மைதானத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் வருத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இருப்பினும், டிரஸ்ஸிங் ரூமில் ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலில் கோலி, அஸ்வினை இப்படி கட்டிப்பிடிக்கும் படத்தைப் பார்த்த பிறகு, அஷ்வின் ஓய்வு பெற நினைக்கிறார் என்ற ஊகம் தொடங்கியது? 

(9 / 9)

மற்ற கேலரிக்கள்