HT Cricket SPL: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக ரன்களை குவித்த பிளேயர்ஸ் யார் யார்?
இவர் மொத்தம் 29 மேட்ச்களில் 1996-2012 காலகட்டத்தில் இந்தத் தொடரில் விளையாடியிருக்கிறார். இவர் 29 மேட்ச்களில் ஆடி, 2555 ரன்களைக் குவித்துள்ளார். 8 சதம், 12 அரை சதம் இதில் அடங்கும்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி என்பது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும், இது இரண்டு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயரை சேர்த்து உருவாக்கப்பட்ட தொடர் ஆகும். ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களை சேர்த்து இந்தத் தொடருக்கு பார்டர்-கவாஸ்கர் என சூட்டப்பட்டுள்ளது. இத்தொடர் 1996 இல் தொடங்கப்பட்டது மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்றாகும், இது பெரும்பாலும் அதன் தீவிரமான மற்றும் போட்டித் தன்மைக்கு பெயர் பெற்றது. கிரிக்கெட் ரசிகர்களும் இப்போட்டியை உன்னிப்பாக கவனிப்பார்கள். இந்தத் தொடரில் இதுவரை அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர். 1996-2013 வரையிலான காலகட்டத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மொத்தம் 34 மேட்ச்களில் விளையாடியுள்ளார் சச்சின். இவர் மொத்தம் 3262 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 சதம், 16 அரை சதம் அடங்கும்.
ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக முறை ஆஸி., அணியை கேப்டனாக வழநடத்தியவர் என்ற லிஸ்ட்டில் மட்டும், அதிக ஸ்கோர் பதிவு செய்த லிஸ்ட்டிலும் உள்ளார். இவர் மொத்தம் 29 மேட்ச்களில் 1996-2012 காலகட்டத்தில் இந்தத் தொடரில் விளையாடியிருக்கிறார். இவர் 29 மேட்ச்களில் ஆடி, 2555 ரன்களைக் குவித்துள்ளார். 8 சதம், 12 அரை சதம் இதில் அடங்கும். இவர் 2004 முதல் 2010 வரை மொத்தம் 11 மேட்ச்களில் கேப்டனாக ஆஸி., அணியை பார்டர்-கவாஸ்கர் தொடரில் வழிநடத்தியிருக்கிறார். இதில் 2 மேட்ச்களில் அந்த அணி ஜெயித்துள்ளது. 6 மேட்ச்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. 3 முறை டிரா செய்துள்ளது.
விவிஎஸ் லஷ்மண்
இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் இடம்பிடித்திருப்பது விவிஎஸ் லஷ்மண். இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தவர். குறிப்பாக டெஸ்டில் சிறப்பான பங்களிப்பை நமது நாட்டு அணிக்காக வழங்கி வந்தவர். இவர் 1998-2012 காலகட்டத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) தொடரில் 29 மேட்ச்களில் விளையாடி மொத்தம் 2434 ரன்களை குவித்துள்ளார். இதில், 6 சதம், 12 அரை சதம் அடங்கும்.
ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர், கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ளார். 1996-2012 காலகட்டத்தில் மொத்தம் 32 BGT மேட்ச்களில் விளையாடி டிராவிட், 2 சதம், 13 அரை சதம் உள்பட 2143 ரன்களை குவித்துள்ளார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி, மொத்தம் 26 BGT மேட்ச்களில் விளையாடி, 2102 ரன்களை எடுத்துள்ளார். 9 சதம், 5 அரை சதம் இதில் அடங்கும்.
கோலி, BGT தொடரில் 2014 முதல் 2020 வரை மொத்தம் 10 மேட்ச்களில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில், 3 மேட்ச்களில் வெற்றி, 4 இல் தோல்வி, 3 இல் டிரா செய்யப்பட்டிருக்கிறது.
டாபிக்ஸ்