தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sl Vs Ban Results: இலங்கை ஹாட்ரிக் வெற்றி-சூப்பர் ஃபோர் சுற்றிலும் வெற்றிநடை!

SL vs BAN Results: இலங்கை ஹாட்ரிக் வெற்றி-சூப்பர் ஃபோர் சுற்றிலும் வெற்றிநடை!

Manigandan K T HT Tamil
Sep 09, 2023 11:02 PM IST

இலங்கை அணி குரூப் பி பிரிவில் இரண்டு ஆட்டங்களிலும் ஜெயித்திருந்தது. தற்போது குரூப் 4 சுற்றின் தனது முதல் ஆட்டத்திலும் ஜெயித்துள்ளது.

வெற்றி மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள். (Photo by Ishara S. KODIKARA / AFP)
வெற்றி மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள். (Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் குரூப் ஃபோர் சுற்றின் 2வது ஆட்டத்தில் இலங்கையும் வங்கதேசமும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்த வங்கதேசம், இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இலங்கை சார்பில் விக்கெட் கீப்பர் குசால் மென்டிஸ் அரை சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் பதும் நிசங்கா, 40 ரன்கள் எடுத்தார். சதீரா சமரவிக்ரமா 93 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச பவுலர் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். டஸ்கினும் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

ஹசன் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்த உதவியதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடியது.

தொடக்க முதலே விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேச அணி சற்று தடுமாறியது. முகமது நயிம், மெஹிதி ஹசன், மிராஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தவுஹிட் ஹிரிடோய் மட்டுமே நின்று விளையாடினார். அவர் 82 ரன்கள் பதிவு செய்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point