தமிழ் செய்திகள்  /  Cricket  /  Srh Creates History By Scoring Highest Total In Ipl Against Mumbai Indians

SRH vs MI Live Score: வரலாறு படைத்த சன் ரைசர்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் - வள்ளல்களாக மாறிய மும்பை பவுலர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 27, 2024 09:30 PM IST

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதித்துள்ளது சன் ரைசர்ஸ். மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் வானவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து அளித்தனர்.

கிரீசில் நின்றவாறே பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் கிளாசன்
கிரீசில் நின்றவாறே பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் கிளாசன் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

மும்பை பவுலிங்

இதையடுத்து டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. 

வரலாறு படைத்த சன் ரைசர்ஸ்

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதிலும் எந்தவொரு பேட்ஸ்மேனும் சதமடிக்காத நிலையில், சன் ரைசர்ஸ் அணியால் இந்த ஸ்கோர் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அடித்த 263 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அதை சன்ரைசர்ஸ் முந்தி சாதித்துள்ளது. 

சன் ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 80 அபிஷேக் ஷர்மா 63, ட்ராவிஸ் ஹெட் 62, ஐடன் மார்க்ரம் 42 ரன்கள் எடுத்துள்ளனர்.

மும்பை பவுலர்கள் அனைவரின் ஓவர்களையும் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் பொளந்து கட்டினர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய குவேனா மபகா 66, ஜெரால்ட் கோட்ஸி 57 ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

சன் ரைசர்ஸ் அதிரடி

சன் ரைசர்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளை அடித்தார்.

அவருடன் இணைந்து அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரி அடித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கடைசி கடைசி 9.1 ஓவரில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசன் 116 ரன்கள் எடுத்தனர். இவர்களும் தங்களது பங்குக்கு அதிரடி வானவேடிக்கை நிகழ்ததினர். கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்தார்.

மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அவுட்டாகமல் இருந்தார். இவர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்

சிக்ஸ்ர், பவுண்டரி மழை

சன் ரைசர்ஸ் அணியின் இன்னிங்ஸில் மொத்தம் 18 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அந்த அணி அடித்த 277 ரன்களில் 184 ரன்கள் பவுண்டரிகள் மூலம் பெறப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point