தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sanju Samson: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ப்ரீமியர் ஷோ! சிறப்பு விருந்தனராக சென்று பார்த்த ரசித்த சஞ்சு சாம்சன்

Sanju Samson: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ப்ரீமியர் ஷோ! சிறப்பு விருந்தனராக சென்று பார்த்த ரசித்த சஞ்சு சாம்சன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2023 11:41 AM IST

ஜெயிலர் படத்தின் சிறப்பு ப்ரீமியர் காட்சியை பார்த்து ரசித்துள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சஞ்சு  சாம்சன் (கோப்புப்படம்)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சஞ்சு சாம்சன் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் அணியில் இடம்பிடித்திருக்கும் சஞ்சு சாம்சன், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக பேட் செய்த சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.

சஞ்ச சாம்சனுக்கு அயர்லாந்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். சொல்லப்போனால் இந்திய அணியில் நிலையான வாயப்பு கிடைக்காமலும், முக்கிய போட்டிகளில் வாயப்புகள் மறுக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் தங்களது அணியில் சேர்த்து கொள்வதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

அத்துடன் அயர்லாந்துக்கு அணிக்கு அளிக்கப்படும் ஆதரவுக்கு இணையாக சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும்போது அவருக்கும் ரசிகர்கள் கரகோஷங்களுடன் ஆதரவு அளிக்கப்படுவது வியப்பான விஷயமாக உள்ளது. இரண்டாவது டி20 போட்டியில் கூட சஞ்சு அடித்த ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் ஆர்பரித்தனர்.

இதையடுத்து சஞ்சு சாம்சனின் விளையாடியபோது, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து திரையரங்குகளில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் சிறப்பு ப்ரீமியர் ஷோவில் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தனராக பங்கேற்றதாக வர்ணனையாளர் தெரிவித்தார்.

 

இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் சாம்சன் தனது பேவரிட் நடிகரான ரஜினிகாந்த நடித்த ஜெயிலர் பிரீமியர் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்வு பெருமை மிக்க தருணமாகவே அமைந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ரசிகர்களின் கண்கள் சஞ்ச சாம்சன் இடம்பிடிப்பாரா என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point