தமிழ் செய்திகள்  /  Cricket  /  Rajasthan Royals Beat Lucknow By 20 Runs

RRvLSG: லக்னோ அணியை பதம்பார்த்த ராஜஸ்தான் அணி; 20 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி!

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 08:37 PM IST

RRvLSG:லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றிபெற்றது.

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு வீரர்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு வீரர்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஆரம்பத்தில் முதல் இரண்டு வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இணை இறங்கியது. ஆனால், ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தபோது மொஷின் கான் பந்தில், பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின், ஜாஸ் பட்லரும் நவீன் உல் ஹக்கின் பவுலிங்கில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெறும் 11 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதன்பின், மூன்றாவது ஆளாக இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், நான்கவதாக இணைந்த ரியான் பராக் இணை, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. ஆனால், நவீன்-உல்-ஹக்கின் பந்தில் ரியான் பராக், 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ஹெட்மயர் வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இடையே இரண்டு விக்கெட்கள் இழந்தாலும் நிலைத்து நின்று ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 52 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார். இதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் மூன்று ஃபோர்களும் அடக்கம்.

தவிர, இவருடன் பார்ட்னர்ஷிப் போட்ட துருவ் ஜுரெல் அவுட் ஆகாமல் 12 பந்துகளுக்கு 20 ரன்கள் எடுத்திருந்தார். தவிர,8 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தன. இறுதியாக 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்களை எடுத்தார்.

இடைவேளைக்குப் பின் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, முதலில் களமிறங்கிய பேட்ஸ்மேன் குவன்டன் டி குக், போல்ட் பந்தில் பர்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், 44 பந்துகளில், 58 ரன்கள் எடுத்தபோது சந்தீப் ஷர்மா பவுலிங்கில், ஜூரெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆனால், மூன்றாவதாக களமிறங்கியதாக, தேவ்தத் படிக்கல், போல்ட் பந்தில் டக் அவுட்டானார். அடுத்துவந்த ஆயுஷ் படோனியும் சிங்கிள் ரன் எடுத்துவெளியேறினார்.

மேலும், ஐந்தாவதாக களமிறங்கிய தீபக் ஹூடா, 26 ரன்கள் எடுத்தபோது, சஹல் பவுலிங்கில், ஜூரெல் ஆகியோரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின், களமிறங்கிய நிக்கோலஸ் பரன்,நிறுத்தி நிதானமாக நின்று ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

41 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 4 சிக்சர்களும், 4 ஃபோர்களும் உள்ளடங்கும். அதன்பின், இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ், அஷ்வினின் பந்தில், ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.கடைசியாக வந்த குருணால் பாண்டியா மூன்று மூன்று ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, ஆறு விக்கெட் இழப்புக்கு, 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே அடித்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியைத் தோல்வியைத் தழுவியது.  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில், போல்ட் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

IPL_Entry_Point