IND vs SA ODI: பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா?-கோலியின் இடத்தை பூர்த்தி செய்யும் வீரர் யார்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa Odi: பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா?-கோலியின் இடத்தை பூர்த்தி செய்யும் வீரர் யார்?

IND vs SA ODI: பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா?-கோலியின் இடத்தை பூர்த்தி செய்யும் வீரர் யார்?

Manigandan K T HT Tamil
Jan 06, 2024 03:36 PM IST

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டிக்கான அவர்களின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI இதோ.

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் (Getty)

தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ் (100), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (60) அரைசதம் விளாச இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தனர். பார்வையாளர்கள் தரப்பில் கேசவ் மகராஜ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் இருக்கும். இதற்கிடையில், இந்த தொடரில் கே.எல் ராகுல் கேப்டனாக இருப்பார்.

ருதுராஜ் கெய்க்வாட் உடல்நலக்குறைவு காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முழு டி20 தொடரையும் தவறவிட்டார். உடல்தகுதியுடன் இருந்தால், முதல் ஒருநாள் போட்டியிலும், மீதமுள்ள தொடரிலும் அவர் முதல்-தேர்வு தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நல்ல பார்மில் உள்ளதோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார். அவர் சாய் சுதர்சனுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி இடத்தை திலக் வர்மா பூர்த்தி செய்வார். ஷ்ரேயாஸ் ஐயர் 4வது வரிசையில் வருவார்.

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யாமல் சஞ்சு சாம்சன் அந்த பணியை ஏற்கவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ரிங்கு சிங், ஆல்-ரவுண்டர் அக்சர் படேலுடன் மிடில் ஆர்டரில் மிரட்ட வாய்ப்புண்டு. ரிங்கு சிங் டெத் ஓவரில் பொளுந்து கட்டுவார் என்பதால் அவரது அனுபவம் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் கைகொடுக்கும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இருப்பர். இதற்கிடையில், அர்ஷ்தீப், அவேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்வார்கள்.

இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI :

தொடக்க ஆட்டக்காரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன்

மிடில் மற்றும் டாப் ஆர்டர்: திலக் வர்மா ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

பவர் ஹிட்டர்: ரிங்கு சிங்

ஆல்-ரவுண்டர்: அக்சர் படேல்

சுழற்பந்து வீச்சாளர்: குல்தீப் யாதவ்

வேகப்பந்து வீச்சாளர்கள்: அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.