பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய பிட்ச்..சீட்டு கட்டு போல் சரிந்த டாப் ஆர்டர் - தட்டி தடுமாறி ரன் குவித்த இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய பிட்ச்..சீட்டு கட்டு போல் சரிந்த டாப் ஆர்டர் - தட்டி தடுமாறி ரன் குவித்த இந்தியா

பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய பிட்ச்..சீட்டு கட்டு போல் சரிந்த டாப் ஆர்டர் - தட்டி தடுமாறி ரன் குவித்த இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 10, 2024 10:56 PM IST

முதலில் பேட் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல் சரிந்த நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய பிட்ச்சில் ஹர்திக் பாண்டியா நிலைத்து நின்று பேட் செய்து ரன்குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய பிட்ச்..சீட்டு கட்டு போல் சரிந்த டாப் ஆர்டர் - தட்டி தடுமாறி ரன் குவித்த இந்தியா
பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய பிட்ச்..சீட்டு கட்டு போல் சரிந்த டாப் ஆர்டர் - தட்டி தடுமாறி ரன் குவித்த இந்தியா (AP)

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கெபெர்ஹாவில் நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பரிக்கா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39, அக்‌ஷர் படேல் 27, திலக் வர்மா 20 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலிங்கில் மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ஆண்டிலே சிமெலேன், ஐடன் மார்க்ரம், பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின்னரான கேசவ் மகாராஜ் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.

சரிந்த டாப் ஆர்டர்

கடந்த போட்டியில் சாதனை சதமடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அபிஷேக் ஷர்மா 4, சூர்யகுமார் யாதவ் 4 என ஒற்றை இலக்கத்தில் வெளியேற 15 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

நெருக்கடியான நிலையில் பேட் செய் திலக் வர்மா, தென் ஆப்பரிக்கா பவுலர்களை சமாளித்து ரன்கள் குவித்தார். ஆனாலும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் அவுட்டானார். 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த அவர் டேவிட் மில்லர் ஒற்றை கையில் பிடித்த அற்புத கேட்ச் மூலம் வெளியேறினார். 

பேட்டிங்குக்கு கடினமான பிட்ச்

பேட்ஸ்மேன்களுக்கு பேட் செய்ய கடினமாக இருந்த பிட்சில் ரன் குவிக்க முடியமால் திணறியபோதிலும் ஹர்திக் பாண்டியா - அக்‌ஷர் படேல் இணைந்து சிறிது பார்ட்னர்ஷிப் பில்டப் செய்தனர். கொஞ்சம் அதிரடியாக பேட் செய்த அக்‌ஷர் படேல், துர்தஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 9 ரன்னில் நடையை கட்டினார். இருப்பினும் கடைசி வரை பொறுப்புடன் பேட் செய்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை மீட்டெடுத்தார். 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.

125 ரன்கள் என்பது டி20 போட்டியில் குறைவான ஸ்கோராக இருந்தாலும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் விதமாக அமைந்திருக்கும் இந்த பிட்ச்சில் இது சவாலான இலக்ககாகவே உள்ளது.

அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் சொதப்பல்

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான இன்னிங்ஸ் மூலம் மிரட்டிய அபிஷேக் ஷர்மா சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதேபோல் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், டி20 கேப்டன் ஆன பிறகு தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும், ரன்கள் குவிப்பதிலும் தடுமாறி வருகிறார். 

அதேபோல் முக்கியமான தருணத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது பார்மை மீட்டுள்ளார். இருப்பினும் பாண்டியாவும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.