Tilak Varma: திலக் வர்மா உள்பட 2 இந்திய வீரர்கள் சர்வதேச டி20-இல் அறிமுகம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tilak Varma: திலக் வர்மா உள்பட 2 இந்திய வீரர்கள் சர்வதேச டி20-இல் அறிமுகம்

Tilak Varma: திலக் வர்மா உள்பட 2 இந்திய வீரர்கள் சர்வதேச டி20-இல் அறிமுகம்

Manigandan K T HT Tamil
Aug 03, 2023 08:34 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

திலக் வர்மா, முகேஷ் குமார்
திலக் வர்மா, முகேஷ் குமார் (@BCCI)

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இதையடுத்து தற்போது இரு அ்ணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்று போட்டிகளில் விளையாட தகுதி பெறாமல் போனது. அதன் பின்னர் இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற தவறியது.

டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற அணி உலகக் கோப்பை விளையாடுவதற்கு தகுதி பெறாமல் இருக்கும் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ். இருப்பினும் டெஸ்ட், ஒரு நாள் அணியை போல் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி சற்று பலமாகவே உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் எம்ஐ நியூயார்க் அணிக்கா விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் இடம்பிடித்திருக்கும் பூரான், பைனலில் அதிரடியாக பேட் செய்து சதமடித்து பார்மில் இருப்பது நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

போட்டி நடைபெறும் தாரூபா பிரெய்ன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை ஒரேயொரு டி20 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பவுலர்கள் சரியாக செயல்பட்டால் சாதிக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.