சேட்டன் வந்தல்லே.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. ‘தமிழ் இவ்வளவு சரளமாக பேசுறீங்க எப்படி?’ - சஞ்சு சாம்சன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சேட்டன் வந்தல்லே.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. ‘தமிழ் இவ்வளவு சரளமாக பேசுறீங்க எப்படி?’ - சஞ்சு சாம்சன்

சேட்டன் வந்தல்லே.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. ‘தமிழ் இவ்வளவு சரளமாக பேசுறீங்க எப்படி?’ - சஞ்சு சாம்சன்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 09, 2024 08:32 AM IST

சஞ்சு சாம்சன் தமிழ் இவ்வளவு சரளமாக பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அந்த காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

சேட்டன் வந்தல்லே.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. ‘தமிழ் இவ்வளவு சரளமாக பேசுறீங்க எப்படி?’ - சஞ்சு சாம்சன்
சேட்டன் வந்தல்லே.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. ‘தமிழ் இவ்வளவு சரளமாக பேசுறீங்க எப்படி?’ - சஞ்சு சாம்சன்

 

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் (sports skeeda )

கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட சஞ்சுசாம்சனுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் அதிகம். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், சஞ்சு சரளமாக தமிழ் பேசுவது அனைவருக்கும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்கு ஒரு கனெக்‌ஷன் இருக்கிறது. அந்த கனெக்‌ஷன் வேறு யாருமில்லை. நடிகர் ரஜினிகாந்த். ஆம், சிறுவயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான இவர், அவரது படங்களை பார்த்து அவர் தமிழுக்கு நெருக்கமானாராம். ரஜினிகாந்தும் சஞ்சு சாம்சனின் விளையாட்டுக்கு தீவிர ரசிகராம். இந்த நிலையில்தான் அவர் சஞ்சுவை பார்க்க வேண்டும் என்று கூறி ஒருமுறை கூப்பிட்டு அனுப்பி இருக்கிறார். அந்த சந்திப்பு குறித்து கடந்த வருடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார்.

ரஜினி சாம்சன்
ரஜினி சாம்சன்

அந்த பேட்டியில் பேசிய அவர், “ ரஜினிகாந்த் சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய 21 வருட கனவு. இப்படிப்பட்ட ஒரு பையனுக்குதான் ரஜினிகாந்த் சாரை அவரது வீட்டிலேயே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வீட்டில் அனைவருமே கிரிக்கெட் பார்ப்பார்கள். கூடவே, அவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆதரவாளர்களாக வேறு இருந்தார்கள். அந்த சந்திப்பு உண்மையில் எனக்கு ஸ்பெஷலான மொமண்ட்.

ஒரு நாள் ரஜினி சார் மேனஜர் வாயிலாக எனக்கு ஒரு போன்கால் வந்தது. யாரென்று பார்த்தால் ரஜினிகாந்த் சார். அவர் என்னிடம் பேசும் போது, நான் உங்களின் மிகப்பெரிய ஃபேன் என்று சொன்னேன். அதற்கு அவர் பயங்கரமாக சிரித்து அப்படியா… ஒரு நாள் வீட்டிற்கு வாருங்கள் என்றார். இதனையடுத்துதான் அவரை நான் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தேன். அவர் மிகவும் உண்மையானவர். அவர் செயல்கள் அனைத்திலும் உண்மை பிரதிபலிக்கும்” என்று பேசினார்.

 

டர்பனில் நடந்த தனது 269வது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராபின் உத்தப்பாவின் சாதனையை அவர் முறியடித்தார். டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் நான்காவது பேட்ஸ்மேன் ஆன சாம்சன், 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார்.

தோனியை பின்னுக்குத் தள்ளிய சாம்சன்

சஞ்சு சாம்சனுக்கு முன்பு, பிரான்சின் குஸ்டாவ் மேசியன், இங்கிலாந்தின் பில் சால்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோசோ ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்துள்ளனர். இந்திய டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 7000 ரன்கள் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். ராகுல் 197 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்திருந்தார். இந்த சாதனையை விராட் கோலி 212 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விட குறைவான இன்னிங்சில் 7,000 ரன்களை எட்டியிருக்கிறார் சஞ்சு சாம்சன். தோனி 305 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சாம்சன் இரண்டாவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவுடன் (21) 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் முதல் போட்டியில் திலக் வர்மாவுடன் (33) மூன்றாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கடைசி 6 ஓவர்களில் இந்திய அணியால் 40 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் ஜெரால்டு கோட்ஸி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 போட்டிகளில் அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்

கே.எல்.ராகுல் - 197 இன்னிங்ஸ்

விராட் கோலி - 212 இன்னிங்ஸ்

ஷிகர் தவான் - 246 இன்னிங்ஸ்

சூர்யகுமார் யாதவ் - 249 இன்னிங்ஸ்

சுரேஷ் ரெய்னா - 251 இன்னிங்ஸ்

ரோஹித் சர்மா - 258 இன்னிங்ஸ்

சஞ்சு சாம்சன் - 269 இன்னிங்ஸ்

ராபின் உத்தப்பா - 269 இன்னிங்ஸ்

எம்.எஸ்.தோனி - 305 இன்னிங்ஸ்

தினேஷ் கார்த்திக் - 336 இன்னிங்ஸ்

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.