இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போல் பிட்டான உடம்பை பெற வேண்டுமா? டயட் முதல் ஒர்க்அவுட் ரகசியம் வரை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போல் பிட்டான உடம்பை பெற வேண்டுமா? டயட் முதல் ஒர்க்அவுட் ரகசியம் வரை

இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போல் பிட்டான உடம்பை பெற வேண்டுமா? டயட் முதல் ஒர்க்அவுட் ரகசியம் வரை

Oct 11, 2024 08:03 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 11, 2024 08:03 PM , IST

  • HBD Hardik Pandya: இந்திய கிரிக்கெட் அணியில் பிட்டனஸ் மிக்க வீரராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. டாப் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாண்டியா தன்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்ன டயட், பயிற்சிகள் செய்கிறார்? அவரது ஃபிட்னஸ் ரகசியம் என்ன என்று பார்ப்போம்.

இந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்களிப்பு ஆற்றிய வீரர்களில் ஒருவராக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பேட்டிங்கில் அதிரடி காட்டியதோடு, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்

(1 / 8)

இந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்களிப்பு ஆற்றிய வீரர்களில் ஒருவராக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பேட்டிங்கில் அதிரடி காட்டியதோடு, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்(instagram)

கடந்த 2023இல் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்ட பாண்டியா, நீண்ட ஓய்வில் இருந்தார். தொடர்ந்து ஐபிஎஸ் தொடரில் விளையாடிய அவர், தனது உடற்தகுதியை நிரூபித்து டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்தார். தற்போது கிரிக்கெட்டில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார்

(2 / 8)

ஒருநாள் உலகக் கோப்பையில் காயம் அடைந்த பின்னர் நீண்ட காலம் அவர் களத்தில் இறங்கவில்லை. ஐபிஎல் 2024 தொடரில் முழு உடல் தகுதியுடன்  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். சிக்கென இருக்கும் தனது உடலை பேனி காக்கும் பாண்டியா, தனது உடலை பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார். ஹர்திக்கின் உணவு முறை என்ன? உடற்தகுதிக்காக அவர்கள் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்

(3 / 8)

உடலை பிட்டாக வைத்துக்கொள்ள தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதோடு, தனது உணவிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார் பாண்டியா. வீட்டில் சமைத்த உணவுகளையே அதிகமாக சாப்பிடுவதை பின்பற்றுகிறார்

(4 / 8)

உடலை பிட்டாக வைத்துக்கொள்ள தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதோடு, தனது உணவிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார் பாண்டியா. வீட்டில் சமைத்த உணவுகளையே அதிகமாக சாப்பிடுவதை பின்பற்றுகிறார்

உடற்சியுடன், கடின வொர்க்அவுட்டை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பழு தூக்குதல், ஓட்டம் மற்றும் கார்டியோ போன்ற பயிற்சிகளையும், டெட் லிஃப்ட், புஷ் அப் மற்றும் புல் அப் போன்றவற்றையும் தவறாமல் செய்கிறார்

(5 / 8)

உடற்சியுடன், கடின வொர்க்அவுட்டை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பழு தூக்குதல், ஓட்டம் மற்றும் கார்டியோ போன்ற பயிற்சிகளையும், டெட் லிஃப்ட், புஷ் அப் மற்றும் புல் அப் போன்றவற்றையும் தவறாமல் செய்கிறார்

ஹர்திக் பாண்டியா தனது மெலிதான உடலைப் பராமரிக்க காலை உணவாக அதிகம் சாப்பிடுவதில்லை. பசியை போக்கும் விதமாக அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ மற்றும் உலர் பழங்களை சாப்பிடுகிறாராம். அதேபோல் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸ் சாப்பிடுகிறார். குறைந்த கொழுப்புள்ள சீஸ் மற்றும் துருவிய முட்டைகளுடன் மல்டிகிரேன் அல்லது பிரவுன் ரொட்டி இவரது காலை உணவாக இருந்து வருகிறது

(6 / 8)

மதிய உணவை பொறுத்தவரை காய்கறி சூப், சோளம், ரொட்டியுடன் சாலட், நாண் மற்றும் சிறிது அளவு சாதம் ஆகியவற்றை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சிக்கன் கபாப் மற்றும் சிக்கன் மஞ்சூரியன் வகைகளைச் சாலட்களுடன் வாரம் ஒருமுறை சாப்பிடுகிறாராம். குறிப்பாக மதிய உணவுடன் தயிர் மற்றும் இளநீர் பருகுவதை கடைப்பிடிக்கிறார்

(7 / 8)

மதிய உணவை பொறுத்தவரை காய்கறி சூப், சோளம், ரொட்டியுடன் சாலட், நாண் மற்றும் சிறிது அளவு சாதம் ஆகியவற்றை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சிக்கன் கபாப் மற்றும் சிக்கன் மஞ்சூரியன் வகைகளைச் சாலட்களுடன் வாரம் ஒருமுறை சாப்பிடுகிறாராம். குறிப்பாக மதிய உணவுடன் தயிர் மற்றும் இளநீர் பருகுவதை கடைப்பிடிக்கிறார்(PTI)

இரவு உணவாக காய்கறி சூப், பழ சாலட், சாதம் மற்றும் மஞ்சள் பருப்பு, ரொட்டி மற்றும் சிக்கன் மக்கானியுடன் கூடிய ஸ்மூத்தி எடுத்து கொள்கிறார். இதுவே அவர் தனது உடலை சிக்கென வைத்துக்கொள்வதன் ரகசியமாக உள்ளது

(8 / 8)

இரவு உணவாக காய்கறி சூப், பழ சாலட், சாதம் மற்றும் மஞ்சள் பருப்பு, ரொட்டி மற்றும் சிக்கன் மக்கானியுடன் கூடிய ஸ்மூத்தி எடுத்து கொள்கிறார். இதுவே அவர் தனது உடலை சிக்கென வைத்துக்கொள்வதன் ரகசியமாக உள்ளது(PTI)

மற்ற கேலரிக்கள்