தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mohammed Shami: 'சிறுத்தை வேட்டைக்கு பாய்ந்து செல்வது போல் இருந்தது ஷமி பந்துவீச்சு'-முன்னாள் வீரர் புகழாரம்

Mohammed Shami: 'சிறுத்தை வேட்டைக்கு பாய்ந்து செல்வது போல் இருந்தது ஷமி பந்துவீச்சு'-முன்னாள் வீரர் புகழாரம்

Manigandan K T HT Tamil
Oct 30, 2023 10:47 AM IST

உலகக் கோப்பை 2023 இல் இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான அணி தோற்கடிக்க முகமது ஷமி முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

முன்னாள் பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர், ஷமியை பாராட்டிய கோலி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ்
முன்னாள் பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர், ஷமியை பாராட்டிய கோலி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் (PTI-Reuters)

ட்ரெண்டிங் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை ஐசிசி உலகக் கோப்பை 2023 இல் இந்தியாவின் ஆறாவது வெற்றியை அடைய, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். பவுலிங்கைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் பந்துவீச்சு பிரமிப்பை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக 29வது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றியைப் பெற்றது. 

காயமடைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஷமி தனது பந்துவீச்சால் அணியை வலுப்படுத்தியுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் தனது முதல் உலகக் கோப்பை 2023 இல் தரம்சாலாவில் நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். லக்னோவின் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை காலி செய்ய முகமது ஷமி அட்டகாசமாக பந்துவீசினார். அவருக்கு 4 விக்கெட்டுகள் கைமேல் பலனாக கிடைத்தது.

'கபில் என்ன செய்தாரோ அதையே ஷமி செய்தார்'

ஐசிசி உலகக் கோப்பை 2023 இல் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு இந்தியா டுடேவிடம் பேசிய பேட்டிங் ஜாம்பவான் கவாஸ்கர், ஷமியின் அற்புதமான  பந்துவீச்சு இந்திய அணிக்கு கிடைத்திருப்பது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 

"நிறைய கடின உழைப்பு இருக்கிறது.  அவருடைய சிறப்பு என்ன? அது வேகப்பந்துவீச்சு. அவர் ஜிம்மில் இருப்பவரா என்று தெரியவில்லை. நீங்கள் நாள் முழுவதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் நாள் முடிவில்...  கபில் தேவ் என்ன செய்தாரோ அதையே முகமது ஷமி செய்து வருகிறார், " என்று கவாஸ்கர் கூறினார்.

'சிறுத்தை பாய்ந்துவருவது போல் இருந்தது'

"ஒரு வேகப்பந்து வீச்சாளராக, உண்மையில் கால்களுக்கு அதிக மைலேஜ் தேவை என்பது அவருக்குத் தெரியும். அவர் பந்து வீச ஓடினார். அவரது பவுலிங் ஸ்டைல் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர் பிட்சில் ஓடி வரும்போது, ட்ரோன் கேமரா அதை அழகாக காட்டியது. சிறுத்தை வேட்டைக்கு பாய்ந்துவருவது போல் காட்சியளித்தார் ஷமி. இது ஒரு அற்புதமான காட்சி, ”என்று கவாஸ்கர் மேலும் கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஷமி செய்த சாதனை என்ன?

லக்னோவில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான குறைந்த ஸ்கோரின் போட்டியில் ஜானி பேர்ஸ்டோ (14), பென் ஸ்டோக்ஸ் (0), மொயீன் அலி (15) ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் ஷமி கைப்பற்றினார். 50 ஓவர் உலகக் கோப்பையில் தனது ஆறாவது நான்கு விக்கெட்டுகளைப் பெற ஷமி அடில் ரஷித்தை நீக்கினார்.

ஒரு நாள் சர்வதேச (ODI) உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் ஷமி (6 முறை) மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (6 முறை) ஆகியோர் அதிக முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா நிர்ணயித்த 230 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டு 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

 

IPL_Entry_Point