தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  David Warner Record: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!

David Warner Record: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!

Manigandan K T HT Tamil
Sep 09, 2023 09:31 PM IST

முடிவில் 50 ஓவர்களில் ஆஸி., அணி, 8 விக்கெட் இழப்புக்கு 392 ரன்களை குவித்தது. 393 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர்.
சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர்.

ட்ரெண்டிங் செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில், தனது 20வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்த டேவிட் வார்னர், சர்வதேச போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை வைத்திருந்த சச்சினின் சாதனையை முறியடித்தார் வார்னர்.

சச்சின் ஓபனிங் பேட்ஸ்மேனாக 45 சதங்களை விளாசியிருந்தார். வார்னர், 46 சதங்களை விளாசி அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

இந்நிலையில் 7ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடிய இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டன. இருப்பினும், ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இன்று மங்காவங் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் சதம் விளாசினார். டிராவிஸ் ஹெட் அரை சதம் பதிவு செய்தார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு சாதனை படைத்தது.

அதாவது, தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் பவர் பிளேயில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. 10 ஓவர்களில் அந்த அணி 102 ரன்கள் எடுத்தது. அதுவும் விக்கெட் இழப்பின்றி என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவில் 50 ஓவர்களில் ஆஸி., அணி, 8 விக்கெட் இழப்புக்கு 392 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 124 ரன்களை குவித்தார். வார்னர் 106 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்லிஸ் அரை சதம் பதிவு செய்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point