அகத்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர்.. மணலால் உருவான லிங்கம்.. காட்சி கொடுத்த சிவபெருமான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அகத்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர்.. மணலால் உருவான லிங்கம்.. காட்சி கொடுத்த சிவபெருமான்

அகத்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர்.. மணலால் உருவான லிங்கம்.. காட்சி கொடுத்த சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Nov 27, 2024 06:00 AM IST

Agastheeswarar: பல கோயில்கள் இருப்பினும் தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சாட்சியாக இருந்து வருகிறது. சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்.

அகத்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர்.. மணலால் உருவான லிங்கம்.. காட்சி கொடுத்த சிவபெருமான்
அகத்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர்.. மணலால் உருவான லிங்கம்.. காட்சி கொடுத்த சிவபெருமான்

இது போன்ற போட்டோக்கள்

இந்தியாவில் சில பக்தர்கள் தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. புராணங்களின் வழியாகத்தான் அனைத்து தகவல்களும் கூறப்படுகின்றன. மனிதர்களால் கட்டப்பட்ட கோயில்கள் ஆயிரம் இருந்தாலும் சிவபெருமான் சுயம்புலிங்கமாக இந்த பூமியில் காட்சி கொடுத்துள்ளார்.

கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். அதன் பின்னர் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் தங்களது வழிபாடுகளை சிவபெருமானுக்கு செய்து வந்துள்ளன. மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு மிகப்பெரிய பிரம்மாண்ட அளவில் சிவபெருமானை கொண்டாடி தீர்த்துள்ளனர்.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானின் மிகப்பெரிய தீவிர பக்தனாக இருந்து வந்துள்ளனர். அதனை உணர்த்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களையும் கட்டி வைத்து சென்றுள்ளனர். 

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. கோயில்களில் இருக்கக்கூடிய கல்வெட்டுகள் மூலம் இந்த கோயில்கள் எந்த காலகட்டத்தில் யாரால் கட்டப்பட்டது. என்று கண்டுபிடிக்கப்படுகிறது

ஆனால் சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எத்தனையோ வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. 

பல ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த கோயில்கள் மிகப்பெரிய சவால்களாக திகழ்ந்து வருகின்றன. பல கோயில்கள் இருப்பினும் தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சாட்சியாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

 

இந்த திருக்கோயிலில் பஞ்ச பாண்டவர்கள் ஒரு ஆண்டு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இங்கு வந்த அகத்தியர் இந்த மண்ணின் மகிமையால் காசியில் இருந்து லிங்கம் ஒன்று எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். ஆனால் அது முடியாத காரணத்தினால் அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி இங்குள்ள மணலை பிடித்து லிங்கம் செய்தார் என கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த கோயிலில் பஞ்சலிங்க வழிபாடு செய்யப்படுகிறது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து பஞ்ச பூதங்களையும் கொண்டதாக ஒரே சன்னதியில் ஐந்து லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனை வழிபடுவதன் மூலம் பஞ்ச பூதங்களையும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக தாயார் அகிலாண்டேஸ்வரியை வழிபட்டால் திருமணத்தடை விலகி விரைவில் திருமணம் கைகூடும் எனவும், சுமங்கலி பெண்களுக்கு தாலி பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த கோயிலின் வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரோடு பிரசன்ன வெங்கடரமண சுவாமி காட்சி கொடுத்து வருகிறார். விஷ்ணு பகவானை வழிபட்டு விட்டு அதன் பின்னர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.

தல புராணம்

சிவபெருமானுக்கும் பார்வதி டேவிக்கும் திருமணம் நடந்த பிறகு அனைவரும் கைலாயத்தின் பக்கம் வந்த காரணத்தினால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமநிலைப்படுத்துவதற்காக சிவபெருமான் அகத்தியரை பொதிகை மலைக்குச் செல்லுமாறு கூறினார். சிவபெருமான் கட்டளை இட்ட காரணத்தினால் அதன் வழி சென்றார் அகத்தியர். செல்லும் வழியெல்லாம் அகத்தியர் பல இடங்களில் அமர்ந்து லிங்கம் அமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த பொழுது மணலில் ஒரு லிங்கம் செய்து அகத்தியர் வழிபட்டார். அகத்தியர் வழிபட்ட லிங்கம் என்கின்ற காரணத்தினால் இவருக்கு அகஸ்தீஸ்வரர் என திருநாமம் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் அங்கு கோயில் அமைக்கப்பட்டது. அந்த ஊரே தற்போது தாராபுரம் என அழைக்கப்படுகிறது.

 

Whats_app_banner