HT Yatra: அகத்தியர் வேண்டுதல்.. தேனாபிஷேகத்தில் அர்த்தநாரீஸ்வரர்.. ரிஷிகள் வந்ததால் ரிஷிவந்தியம்
HT Yatra: சிவபெருமானின் பக்தியையும் கலைநயத்தை வெளிப்படுத்தும் கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகிறது. எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் உள்ளன அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: பார் போற்றும் கடவுளாக விளங்க கூடியவர் சிவபெருமான். இவர் மன்னர்களுக்கெல்லாம் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார் குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தங்களது கலை நுட்பத்தை வெளிப்படுத்துவதற்காக மன்னர்கள் அனைவரும் கோயில்களை கட்டி வழிபாடுகள் செய்து வந்துள்ளனர் மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார் ஆயுதங்களால் போரிட்டது மட்டுமல்லாமல் தங்களது கலை நயத்தை வெளிப்படுத்துவதற்காகவே பிரம்மாண்ட கோயில்களை மன்னர்கள் கட்டிச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் மன்னர்கள் கோயில்களை கட்டி சென்றுள்ளனர் சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை தங்களது கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் எத்தனையோ கோயில்கள் இருப்பினும் தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் சோழ மன்னன் ராஜராஜ சோழன் நாள் கட்டப்பட்டது இன்று வரை சிவபெருமானின் பக்தியையும் கலைநயத்தை வெளிப்படுத்தும் கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகிறது.
எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் உள்ளன அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.
தல பெருமை
தேவர்களின் தலைவனாக விளங்க கூடியவர் இந்திரன் இவர் இந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்துவிட்டு வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அம்பிகைக்கு மட்டும் வழிபாடு நடத்தாமல் சென்றுள்ளார்.
இதனை கண்ட பார்வதி தேவி ஒருமுறை அபிஷேக கூடங்கள் அனைத்தையும் மறைத்து விட்டார் பால்குடங்கள் காணாமல் போனதால் வருத்தத்தில் ஆழ்ந்தார் இந்திரன். தன்னால் நேர்த்திக்கடன் செலுத்த முடியவில்லை என்பதற்காக அருகில் இருந்த பலிபீடத்தில் தனது தலையை முட்டி உயிரை போக்கிக் கொள்ள நினைத்தார்.
அப்போது திடீரென சிவபெருமான் தோன்றி இனிமேல் உன் பார்வதி தேவிக்கும் அபிஷேகம் செய்யும்படி கூறினார். அதேசமயம் நீ தேன் அபிஷேகம் செய்யும் பொழுது அர்த்தநாரீஸ்வரராக நான் காட்சி கொடுப்பேன் என கூறிவிட்டு சிவபெருமான் மறைந்து விட்டார்.
இன்றும் கூட இந்த லிங்கத்தின் தேனா அபிஷேகம் செய்யும் பொழுது அர்த்தநாரீஸ்வரராக ஆண் பாதி மற்றும் பெண் பாதி இருப்பது போல ஒளி வடிவில் இறைவன் காட்சிப்படுத்து வருகிறார் மற்ற அபிஷேகம் செய்யும்பொழுது இதுபோல இருக்காது என கூறப்படுகிறது.
தல வரலாறு
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலாயத்தில் திருமணம் நடைபெற்றது அதனால் உலகத்தில் உள்ள தேவர்கள் முனிவர்கள் என அனைவரும் கைலாயத்தில் குவிந்தனர். இதனால் வட திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சீர் செய்வதற்காக சிவபெருமான் அகத்தியரை தென்திசை நோக்கி அனுப்பி வைத்தார்.
சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப அகத்தியர் தென்திசை நோக்கி பயணம் செய்தார் பல இடங்களில் தங்கி சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டு சென்றார். எனக்கு மட்டும் திருமண காட்சி கிடைக்கவில்லை என வருத்தப்பட்டு அகத்தியர் மனமுருகி சிவபெருமானிடம் வழிபட்டார்.
அதனால் சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்தார். உடனே அகத்தியர் நான் காண்பது போல இந்த காட்சி உலக மக்கள் அனைவரும் காண வேண்டும் என வேண்டி கொண்டார். தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தில் தேனாபிஷேகம் செய்தால் நான் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பேன் என கூறினார். இதன் காரணமாக பல ரிஷிகள் இங்கே தங்கிய ஈசனை வழிபட்டு சென்றனர் அதனால் இந்த இடத்திற்கு ரிஷிவந்தியம் என பெயரிடப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்