அகத்தியரை வேண்டிக்கொண்ட திருஞானசம்பந்தர்.. சுயம்புலிங்கமாக சிவபெருமான்.. காட்சி கொடுத்த தொண்டர்கள் நயினார்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அகத்தியரை வேண்டிக்கொண்ட திருஞானசம்பந்தர்.. சுயம்புலிங்கமாக சிவபெருமான்.. காட்சி கொடுத்த தொண்டர்கள் நயினார்

அகத்தியரை வேண்டிக்கொண்ட திருஞானசம்பந்தர்.. சுயம்புலிங்கமாக சிவபெருமான்.. காட்சி கொடுத்த தொண்டர்கள் நயினார்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 24, 2024 07:00 AM IST

Thondarkal Nainar: ஆராய்ச்சியாளர்கள் வியக்கும் படி ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் கோயில்.

அகத்தியரை வேண்டிக்கொண்ட திருஞானசம்பந்தர்.. சுயம்புலிங்கமாக சிவபெருமான்.. காட்சி கொடுத்த தொண்டர்கள் நயினார்
அகத்தியரை வேண்டிக்கொண்ட திருஞானசம்பந்தர்.. சுயம்புலிங்கமாக சிவபெருமான்.. காட்சி கொடுத்த தொண்டர்கள் நயினார்

சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது. என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை வானுயர்ந்து காணப்படும் இந்த கோயில்கள் சிவபெருமானின் மேன்மையை உணர்த்துகிறது. கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருபவர். சிவபெருமான் காலத்தை கடந்து எந்த உருவமும் இல்லாமல் லிங்க வடிவில் அனைத்து கோயில்களிலும் காட்சி கொடுத்து மதங்களைக் கடந்த கடவுள் ஆக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் லிங்க வடிவில் காட்சி கொடுக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அந்த அளவிற்கு ஆதி காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமான் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். மன்னர்கள் காலகட்டத்தில் சிவபெருமான் குலதெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளார்.

மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து வந்தாலும் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அதனை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்களின் தங்களின் கலை நுட்பத்தை வெளிப்படுத்தியவாறு பல சிற்பங்களை செதுக்கி தங்கள் வரலாறுகளை அந்த கோயில்களில் பதித்துச் சென்றுள்ளனர்.

இப்படி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன. தற்போது கூட தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வியக்கும் படி ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தொண்டர்கள் நயினார் என அழைக்கப்படுகிறார். தாயார் கோமதி என்ற திருநாமத்தோடு வணங்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் விளங்கி வருகிறது. தல தீர்த்தமாக பஞ்ச தீர்த்தம் இருந்து வருகிறது.

இங்கு சிவபெருமான் சன்னதிக்கு முன்பாக திருஞானசம்பந்தர் மற்றும் அகத்தியர் இருவரின் சிலை காணப்படுகிறது. இந்த கோயிலில் சனி பகவான் தனியாக காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக சனி பகவானின் வலது கையில் கிளி அமர்ந்தபடி காணப்படுகிறது.

தல வரலாறு

திருஞானசம்பந்தர் சிவபெருமானின் கோயில்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். ஒரு முறை சம்பந்தர் குற்றாலம் சென்று விட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது நெல்லையப்பரை வணங்கியபடி பதிகம் பாடியுள்ளார். அப்போது அவருடன் வந்த சிவனடியார்கள் இந்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை திருஞானசம்பந்தரிடம் தெரிவித்துள்ளனர்.

சிவனடியார்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த திருஞானசம்பந்தர் லிங்கத்தை தனியாக பிரதிஷ்டை செய்வது கூடாது என நினைத்துள்ளார். உடனே அகத்தியரை மனதில் நினைத்துக் கொண்டு சிவனடியார்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் படி வேண்டிக் கொண்டுள்ளார்.

உடனே அங்கு ஒரு பகுதியில் இருந்த வில்வ வனத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக இருப்பதை சம்பந்தருக்கு அகத்தியர் காட்டியுள்ளார். உடனே அந்த இடத்திற்கு சென்ற சம்பந்தர் சுயம்புலிங்கம் இருப்பதை கண்டுள்ளார். அதன் பின்னர் சிவனடியார்களுடன் சேர்ந்து திருஞானசம்பந்தர் லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டுள்ளார். அதன் பின்னர் சிவபெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருள் வழங்கியுள்ளார். தொண்டர்களுக்காக சிவபெருமான் எழுந்தருளிய காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தொண்டர்கள் நயினார் என அழைக்கப்பட்டார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்