கையில் லிங்கத்தை பூஜை செய்த கபில மகரிஷி.. பசுவாக மாற சாபம் கொடுத்த சிவபெருமான்.. அருள் புரிந்த தேனுபுரீஸ்வரர்
Thenupureeswarar: சென்னை மாவட்டம் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலூரில் வீழ்ச்சி இருக்க கூடிய சிவபெருமான் தேன்புரீஸ்வரர் எனவும் தாயார் தேனுகாம்பாள் எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.
Lord Shiva: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக்கூடியவர் சிவபெருமான். இவருக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் சிவ பெருமானுக்கு இருந்து வருகிறது.
இமயம் தொடங்கி கன்னியாகுமரி வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் சிவபெருமானின் பித்தனாக எத்தனையோ பக்தர்கள் திரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சொல்லவே தேவை இல்லை. காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
மண்ணுக்காக மன்னர்கள் ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது கலைநயம் மற்றும் சிவபக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பல்வேறு விதமான பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன.
அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலூரில் வீழ்ச்சி இருக்க கூடிய சிவபெருமான் தேன்புரீஸ்வரர் எனவும் தாயார் தேனுகாம்பாள் எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.
தல சிறப்பு
மூலஸ்தானத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் சதுர பீடத்தில் காட்சி கொடுத்து வருகிறார். ஒரு ஜாண் அளவு கொண்ட சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். அதேபோல பசுமாடு மிதித்த தழும்பும். பசுமாடு காலடிப்பட்ட பள்ளமும் இங்கு காணப்படுகிறது. எங்க வீட்டுல இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு நாகாபரணம் அணிவிக்கப்படுகிறது.
தூண்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அந்த சிற்பங்களில் சரபேஸ்வரர் இருக்கின்றார். இவருக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரங்களில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. ஒரு தூணில் விநாயகர் பெருமான் கையில் வீணையோடு காட்சி கொடுக்கிறார். மற்றொரு தூணில் முருகப்பெருமான் யானை மீது அமர்ந்து கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். அவருடைய இடது கையில் சேவல் இருக்கின்றது.
தல வரலாறு
சரகன் என்பவரின் மகன் கபில மகரிஷியிடம் சாபத்தை பெற்றார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டது. அதற்குப் பிறகு அந்த வம்சத்தில் பிறந்த பகிரதன் கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்றார். தனது சாபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை கண்டு கபிலர் மிகுந்த மன வருத்தம் கொண்டார்.
அதற்கு விமோசனம் தேடுவதற்காக சிவபூஜை ஒன்றை செய்தார். ஒரு லிங்கத்தில் தனது இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் மலர்களை தூவி சிவ பூஜை செய்தார். உடனே சிவபெருமான் காட்சி கொடுத்து கையில் லிங்கத்தை வைத்து வணங்கியதற்கான காரணம் குறித்து கேட்டார். கீழே மணலில் வைத்து எனக்கு பூஜை செய்ய மனம் கிடையாது. அதன் காரணமாகவே கையில் வைத்து லிங்கத்தை பூஜித்து வந்தேன் கபிலர் கூறினார்.
கையில் வைத்து பூஜை செய்தது சரி கிடையாது எனக் கூறி பசுவாக மாற வேண்டுமென சிவபெருமான் கூறினார். உடனே பசுவாக உருவெடுத்த கபிலர் இந்த தளத்தில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்றார். அதற்குப் பிறகு இந்த பகுதி ஆண்டு வந்த மன்னர் ஒருவர் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் வந்து கபிலர் வழிபட்ட காரணத்தினால் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தேனுபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். தேனு என்றால் பசு என்று அர்த்தம்.
தொடர்புடையை செய்திகள்