HT Yatra: வேடனாக வந்த சிவபெருமான்.. தலையில் தாக்கிய அர்ஜுனன்.. உருமாறிய திருவேட்டீஸ்வரர்
HT Yatra: மன்னர்கள் அமரும் இடமெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைத்து வழிபாடுகளை நடத்திச் சென்றுள்ளனர்.அந்த வரிசையில் இருக்கும் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்.

HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கொண்டிருக்க கூடியவர் சிவபெருமான். மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. உலகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் சிவபெருமானுக்கு இருந்து வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் அந்த காலத்தில் போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவும், சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய பிரமாண்டமான கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
இதுவரை காலத்தால் அழிக்க முடியாமல் கம்பீரமாக அந்த கோயில்கள் நின்று வருகின்றன. சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் எதிரிகளாக இருந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு எத்தனையோ கோயில்களை கட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் அமரும் இடமெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைத்து வழிபாடுகளை நடத்திச் சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட கோயில்கள் தான் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருவேட்டீஸ்வரர் எனவும் தாயார் செண்பகாம்பிகை எனவும் திருநாமம் கொண்டு அழைக்கப்பட்ட வருகின்றனர். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் செண்பக தீர்த்தம் என அழைக்கப்படுகிறது தல விருச்சமாக செண்பகவிருட்சம் விளங்கி வருகிறது.
இந்த திருக்கோயில் ராகு கேது பரிகார தளமாக விளங்கி வருகின்றது. தான் செய்த தவறுக்கு வருந்தக்கூடியவர்கள் மற்றும் நாக தோஷம் நீங்க கூடியவர்கள் இந்த திருக்கோயிலுக்கு வந்து திருவேட்டீஸ்வரரை வணங்கி வழிபட்டால் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அமுதத்தை உண்டு நாக தலையை கொண்டு கேது பகவானும் பாம்பு உடலை கொண்டு ராகு பகவானும் அழியாத் தன்மையை பெற்றனர். அவர்கள் கிரக பதவியையும் பெற்றுக் கொண்டனர். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகங்களின் உரிய பொருளாக விளங்கக்கூடிய மந்தாரை, செவ்வரளி மலர், கொள்ளு தானியம், உளுந்து உள்ளிட்டவற்றை திருவேட்டீஸ்வரருக்கு படைத்து வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தல வரலாறு
இந்த காலத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொள்வது என்பது அனைவரும் செய்வது. அதுபோல அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பொழுது ஒரு பன்றியை வேட்டையாடி உள்ளார். அப்போது சிவபெருமான் வேடன் வடிவில் வந்துள்ளார். வேட்டையாடப்பட்டு கீழே கிடந்த பன்றியை தனக்குரியது எனக்கூறி அர்ஜுனனுடன் வேடனாக வந்த சிவபெருமான் வாதம் செய்தார்.
இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது உடனே இருவரும் போரிட்டுக் கொண்டனர் அப்போது அர்ஜுனன் எய்த அம்பு சிவபெருமானின் தலை மீது பட்டுள்ளது அப்போது தலையில் இருந்து ரத்தம் வலியை தொடங்கியது. உடனே வேடனாக இருந்த சிவபெருமானின் சுயரூபம் வெளியே தெரிந்தது. உடனே அதிர்ந்து போன அர்ஜுனன் ஓடிச்சென்று சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார்.
சிவபெருமான் அர்ஜுனனை மன்னித்தார் பல இடங்களுக்கு சென்று அர்ஜுனன் சிவ வழிபாடுகளை செய்தார். பின்னர் இந்த கோயிலுக்கு வந்த பொழுது சுயம்புலிங்கமாக இருக்கக்கூடிய சிவபெருமானைக் கண்டு அர்ஜுனன் வழிபட்டார் வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்த காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருவேட்டீஸ்வரர் என பெயர் பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
