’அயோத்திக்கு முன்பு வரை!' இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள் விவரம் இதோ!
By Kathiravan V Jan 23, 2024
Hindustan Times Tamil
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயில், உட்புறத்தில் 130 கிலோ தங்கமும், அதன் கோபுரத்தில் 150 கிலோ தங்கமும் உள்ளது.
மும்பை சித்தி விநாயகம் கோயில் மூலவருக்கு நான்கு கிலோ தங்க அணிகலன்கள் உள்ளது. 125 கோடி ரூபாய் நிகர மதிப்பு தினசரி 30 லட்சம் ரூபாய் வருமானம் பதிவாகியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 6 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி கோயிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் உள்ளது.
ஷீரடியில் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ள சாய்பாபா கோயிலுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு 400 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வந்துள்ளது.
சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில் 400 கிலோ தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஆண்டு வருவாய் 500 கோடியாக உள்ளது.
குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமாக 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் பிரதான கோபுரம் 100 அடி உயரம் கொண்டது. கோயிலின் வெளிப்புற சுவரில் பல சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன. இந்த கோயிலுக்கு 1737 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத் தொகை உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலம் உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சக்திவழிபாட்டு தலமான வைஷ்ணவி தேவி கோயிலுக்காக 1800 கிலோ தங்கம் உள்ளது-. 2000 கோடி ரொக்கம் கோயில் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் சொத்துக்களின் மதிப்பு 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 10,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் மகாவிஷ்ணு அனந்தசயனம் கோலத்தில் காட்சி அளிக்கிறார். 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு சொந்தமாக 1.20 லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன.
திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு சொந்தமாக 3 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.