Tuesday Temple: சாபத்தை பெற்ற மன்னன்.. நிவர்த்தி கொடுத்த பூவனாதர்.. அமர்ந்த கோலத்தில் அலங்காரம் பெறும் செண்பகவல்லி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tuesday Temple: சாபத்தை பெற்ற மன்னன்.. நிவர்த்தி கொடுத்த பூவனாதர்.. அமர்ந்த கோலத்தில் அலங்காரம் பெறும் செண்பகவல்லி

Tuesday Temple: சாபத்தை பெற்ற மன்னன்.. நிவர்த்தி கொடுத்த பூவனாதர்.. அமர்ந்த கோலத்தில் அலங்காரம் பெறும் செண்பகவல்லி

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 03, 2024 06:30 AM IST

Tuesday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பூவனாதர் எனவும் தாயார் செண்பகவல்லி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Tuesday Temple: சாபத்தை பெற்ற மன்னன்.. நிவர்த்தி கொடுத்த பூவனாதர்.. அமர்ந்த கோலத்தில் அலங்காரம் பெறும் செண்பகவல்லி
Tuesday Temple: சாபத்தை பெற்ற மன்னன்.. நிவர்த்தி கொடுத்த பூவனாதர்.. அமர்ந்த கோலத்தில் அலங்காரம் பெறும் செண்பகவல்லி

நமது இந்திய நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடவுள் குலுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகிறார். தமிழ் மக்களின் ஆதி கடவுளாக சிவபெருமான் திகழ்ந்த வருகின்றார்.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை பல மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளனர். குறிப்பாக சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளன. 

மிகப்பெரிய சோழ மன்னனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்றுவரை அதற்கு சாட்சியாக நின்று வருகிறது. எப்படி இந்த கோயிலை கட்ட முடியும் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த கோயில்கள் வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன.

இதுபோல சிவபெருமானை குலதெய்வமாக வணங்கிய எத்தனையோ மன்னர்கள் கோயில்களை கட்டி வைத்துச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பூவனாதர் எனவும் தாயார் செண்பகவல்லி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

மதுரையில் சிவபெருமான் இருந்தாலும் மீனாட்சி அம்மனுக்கே பெருமை. அதுபோல இந்த திருக்கோயிலும் அம்பாளுக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக அனைத்து கோயில்களிலும் அம்பாளுக்கு அதே நிலையில் அலங்காரம் செய்யப்படும். ஆனால் இந்த திருக்கோயிலில் அம்பாலை உட்கார்ந்து இருப்பது போல அலங்காரம் செய்கின்றனர். அது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ராமபிரான் இந்த கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதேபோல இங்கு வீற்றிருக்கக்கூடிய இறைவனை பாம்பு தலைவர்கள் ஆன சதுங்கண், பதுமன் என இருவரும் பூவன பூக்களால் வழிபாடு செய்துள்ளனர் அதனால் இவர் பூவனாதர் என அழைக்கப்பட்டுள்ளார்.

தல வரலாறு

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். அதனால் வடபக்கம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்தது. இதனை சமன் செய்வதற்காக சிவபெருமான் அகத்தியரை பொதிகை மலை நோக்கி பயணம் செய்ய சொன்னார்.

அப்போது அகத்தியருக்கு இடையூறு செய்த வாதாபி, விலவணன் ஆசியோரை அகத்தியர் வதம் செய்தார். இதனால் இவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அதனை நிவர்த்தி செய்வதற்காக அவருக்கு பொன்மலை முனிவர்கள் அறிவுரை கூறினார்கள்.

அதற்கு இணங்க அகத்தியர் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கினார். நந்தி தேவரின் சாபத்தால் வாமணன் வெம்பக்கோட்டை பகுதியில் வேந்தனாக பிறந்தார். அவருக்கு செண்பக மன்னன் என்ற பெயர் வைக்கப்பட்டது. அவரே பூவனாதருக்கு கோயில் அமைத்து சாப நிவர்த்தி பெற்றார். செண்பக மன்னனால் இந்த கோயில் கட்டப்பட்ட காரணத்தினால் தாயார் செண்பகவல்லி என்ற பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner