HT Yatra: அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம்.. குரு பகவான் தலம்.. அருள்தரும் ஆனந்தீஸ்வரர்
HT Yatra: எத்தனையோ கோயில்கள் வரலாறுகளைக் கடந்து இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் சிவபெருமான் ஆனந்தீஸ்வரர் எனவும் தாயார் ஆனந்த வள்ளியம்மன் எனவும் அழைக்கப்படுகின்றன.
HT Yatra: உலகமெங்கும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான் தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியாக உலகம் எங்கும் காட்சி கொடுத்த வருகிறார். மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை பலருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.
மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். குறிப்பாக இந்தியா முழுவதும் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
இந்தியாவின் தெற்கு பகுதியில் சிவபெருமானுக்கு தனித்துவமான பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பக்கமும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பது இன்றுவரை காண முடிகிறது.
ராஜாக்களுக்கு எல்லாம் ராஜனாக விளங்கிய மிகப்பெரிய சோழமண்டன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கம்பீரமாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நின்று வருகின்றது. சிவபெருமானை குலதெய்வமாக சோழர்கள் வணங்கி வந்துள்ளனர்.
தோழர்களின் மிகப்பெரிய எதிரியாக திகழ்ந்து வந்த பாண்டியர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு நாட்டுக்காக போரிட்டு வந்தாலும் அதே போல போட்டி போட்டுக் கொண்டு தங்களது கலை நயத்தை வெளிப்படுத்தி சிவபெருமான் கோயில்களை இந்தியாவின் தெற்கு பகுதிகள் முழுக்க கட்டினார்கள்.
இதுபோன்று எத்தனையோ கோயில்கள் வரலாறுகளைக் கடந்து இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் சிவபெருமான் ஆனந்தீஸ்வரர் எனவும் தாயார் ஆனந்த வள்ளியம்மன் எனவும் அழைக்கப்படுகின்றன. கோயிலின் தல விருட்சமாக கல்லால மரம் விளங்கி வருகிறது.
தல சிறப்பு
கோயிலின் தலை விருட்சமாக விளங்கக்கூடிய கல்லால மரத்தின் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த திருக்கோயிலில் சிவபெருமானை தாங்கி நிற்கும் அதாவது சிவலிங்கத்தை தாங்கி நிற்கும் ஆவுடையாரின் பீடம் தாமரை போல் காட்சியளிப்பது மிகவும் சிறப்பாகும். இவரை வழிபட்டால் குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகமாக விளங்கி வருகிறது.
இவரை அகத்திய மகரிஷி பூஜித்து வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல சிவபெருமானுக்கு வழிபட்டு பூஜை செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது இந்த தளத்தின் சிறப்பாக விளங்கி வருகிறது. இங்கு தல விருச்சமாக விளங்கக்கூடிய கல்லால மரம் குரு பகவானின் மரமாக கருதப்படுகிறது.
அதனால் இது குரு பகவானின் தலமாக கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக விளங்கக்கூடிய இந்த ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் மிகவும் விசேஷமான கோயில் ஆகும் சிதலமடைந்த நிலையில் இருந்த இந்த கோயிலை 15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற மக்கள் சுத்தப்படுத்தி வழிபாடுகள் செய்ய தொடங்கியுள்ளன.
தல வரலாறு
சிவபெருமான் மற்றும் பார்வதி இருவருக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை காண்பதற்காக அனைவரும் கைலாயத்தில் ஒன்று கூடினார்கள். இதனால் வடக்கு புறம் தாழ்ந்து தெற்கு புறம் உயர்ந்தது.
பூமியை சமநிலைப்படுத்துவதற்காக சிவபெருமான் அகத்திய முனிவரை தெற்கு பக்கம் புறப்பட்ட செல்ல உத்தரவிட்டார். வருகின்ற வழிகளில் பல இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அகத்திய மாமுனிவர் வழிபட்டார். அப்படி அகத்திய மாமுனிவர் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றுதான் இந்த திருநின்ற ஊரில் இருக்கக்கூடிய ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்.
102 ஆம் ஆண்டு இந்த கோயிலை சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் திருப்பணி செய்து வழிபட்டதாக கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. அகத்திய முனிவரால் வழிபடப்பட்ட சிவபெருமான் கோயில் தற்போது குரு ஸ்தலமாக விளங்கி வருவது மிகப்பெரிய விசேஷமாக கருதப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9