தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அந்தப்புரத்தில் இருந்த மன்னன்.. காத்திருந்து கோபமான ராஜகுரு.. தோஷத்தால் உருவான மீனாட்சி சொக்கநாதர்

HT Yatra: அந்தப்புரத்தில் இருந்த மன்னன்.. காத்திருந்து கோபமான ராஜகுரு.. தோஷத்தால் உருவான மீனாட்சி சொக்கநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 10, 2024 05:50 AM IST

HT Yatra: அனைத்து கோயில்களும் பல வரலாறுகளை சுமந்து கொண்டு கம்பீரமாக நின்று வருகின்றன. இதுபோல எத்தனையோ மன்னர்கள் பல கோயில்களை கட்டியுள்ளனர் அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.

அந்தப்புரத்தில் இருந்த மன்னன்.. காத்திருந்து கோபமான ராஜகுரு.. தோஷத்தால் உருவான மீனாட்சி சொக்கநாதர்
அந்தப்புரத்தில் இருந்த மன்னன்.. காத்திருந்து கோபமான ராஜகுரு.. தோஷத்தால் உருவான மீனாட்சி சொக்கநாதர்

மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவனை தேடி எத்தனையோ மக்கள் மலை மலையாக சுற்றி வருகின்றனர். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் நாட்டுக்காக போரிட்ட அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார்.

தங்களின் பக்திகளை வெளிப்படுத்துவதும் பொருட்டாக மன்னர்கள் அனைவரும் கலை நேரத்தோடு எத்தனையோ மிகப் பிரமாண்டமான கோயில்களை தமிழ்நாட்டில் உள்ளனர். சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இருவரும் எதிரிகளாக திகழ்ந்து வந்தாலும் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர்களாக இருந்து வந்துள்ளனர்.

மாபெரும் சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோயிலை மிகவும் கலைநயத்தோடு கட்டியுள்ளார் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி கம்பீரமாக நின்று வருகிறது. இதுபோல மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவாரூர் கோயில் என அனைத்து கோயில்களும் பல வரலாறுகளை சுமந்து கொண்டு கம்பீரமாக நின்று வருகின்றன.

இதுபோல எத்தனையோ மன்னர்கள் பல கோயில்களை கட்டியுள்ளனர் அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்படுகின்றனர் வில்வமரம் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவரின் மீது மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சூரிய ஒளி படுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த திருக்கோயிலில் படித்துறையில் இருக்கக்கூடிய விநாயகர் ஜடாமுடியோடு காட்சி கொடுத்து வருகிறார் இந்த கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் தனி சிறப்பு என்னவென்றால் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பு படித்துறையில் இருக்கக்கூடிய விநாயகர் வழிபாடு செய்து விட்டு அதற்குப் பிறகு சிவபெருமான் மற்றும் தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.

மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மன் திருக்கோயில் போலவே இந்த கோயில் அமைந்திருக்கும். மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருப்பது போலவே இந்த கோயிலிலும் அன்னை மீனாட்சி சிவபெருமானுக்கு வலது புறத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.

தல வரலாறு

மாறவர்ம சுந்தரபாண்டியன் என்பவர் ஒருமுறை தனது ராணியோடு அந்தப்புரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பாண்டிய மன்னனின் ராஜகுரு வாசத் திகழ்ந்து வந்த பரஞ்ஜோதி முனிவர் அவசர வேலையாக மன்னனை காண வந்துள்ளார்.

மன்னனை காண்பதற்காக அந்தப்புரத்தில் வாசலில் காத்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் ராஜகுருவை காண்பதற்காக மன்னன் வெளியே வரவில்லை. உடனே ராஜகுரு வாசலில் இருந்த காவலனிடம் தகவலை தெரிவித்து விட்டு தான் இருக்கக்கூடிய ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.

வெகு நேரம் கழித்து மன்னன் வெளியே வந்த பிறகு ராஜகுரு வந்த செய்தி குறித்து வாசலில் இருந்த காவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வருத்தம் அடைந்த மன்னன் ராஜ குருவை தேடி ஆசிரமம் சென்றார். தான் செய்த தவறை உணர்ந்து ராஜகுருவிடம் மன்னிப்பு கேட்டார். கோபத்தில் இருந்த ராஜகுரு மன்னனை மன்னித்து. குருவை காக்க வைத்த தோஷம் உனக்கு உள்ளது இதனை நீ நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் அருப்புக்கோட்டையில் சிவபெருமானுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி மாறவர்ம சுந்தர பாண்டியன் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9