தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மன்னனுக்கு ஏற்பட்ட தோஷம்.. சிற்பிக்கு மனமிறங்கிய சிவபெருமான்.. தாண்டேஸ்வரராக மாற்றம்

HT Yatra: மன்னனுக்கு ஏற்பட்ட தோஷம்.. சிற்பிக்கு மனமிறங்கிய சிவபெருமான்.. தாண்டேஸ்வரராக மாற்றம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 12, 2024 06:35 AM IST

Kollam Thandeswarar Temple: தமிழ்நாடு சிவபெருமானின் நாடாக இருந்து வருகிறது. பல்வேறு விதமான கோயில்களில் சிறப்போடு அருள்பாளித்து வருகிறார் சிவபெருமான். அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாண்டேஸ்வரர் திருக்கோயில்.

சிவபெருமான்
சிவபெருமான்

குறிப்பாக தமிழ்நாடு சிவபெருமானின் நாடாக இருந்து வருகிறது. பல்வேறு விதமான கோயில்களில் சிறப்போடு அருள்பாளித்து வருகிறார் சிவபெருமான். அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாண்டேஸ்வரர் திருக்கோயில்.

தல பெருமை

 

ஒரு மன்னர் நடராஜரை உற்சவரராக வைக்க வேண்டும் என விரும்பி ஒரு சிரிப்பு இடம் சிலை வடிக்க சொல்லி கூறியுள்ளார். அந்த சிலை இரண்டு முறை செய்தும் சரியாக அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த மன்னர் அந்த சிலையை சரியாக அடுத்த முறை செய்யவில்லை என்றால் உனக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன சிற்பி மன்னர் கையால் உயிர் விடுவதை விட உனக்கே எனது உயிரை கொடுத்து விடுகிறேன் எடுத்துக்கொள் என சிவபெருமானை நோக்கி முறையிட்டுள்ளார். பக்தனின் குரலுக்கு மனமிரங்கிய சிவபெருமான் நடராஜராக அருள் காட்சி கொடுத்து அதே அம்சத்தில் சிலையாக அமர்ந்தார்.

தாண்டீஸ்வரராக அமர்ந்திருக்க கூடிய சிவபெருமான் அதே பெயரில் இங்கு கோயிலில் அருள் பாலித்து வருகிறார். இந்த திருக்கோயில் அமராவதி ஆற்றின் தென்கரையில் இருக்கின்றது. சிவபெருமானின் சன்னதிக்கு இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. இந்த கோயிலில் அக்னீஸ்வரர் சன்னதி உள்ளது. மேலும் 32 தத்துவங்களை உணர்த்தக் கூடிய வகையில் இந்த கோயிலில் தூண்கள் கலை அம்சத்தோடு அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இருக்கக்கூடிய தட்சணாமூர்த்தி இரண்டு சீடர்களோடு காட்சி கொடுக்கின்றார். பொதுவாக தட்சிணாமூர்த்தி நான்கு சீடர்களோடு இருப்பார் ஆனால் இந்த திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி இரண்டு பக்கங்களிலும் இரண்டு சீடர்கள் தனியே தவக்கோளத்தில் காட்சி கொடுக்கின்றனர் அது மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது.

தல வரலாறு

 

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வீர சோழீஸ்வர மன்னர் ஆட்சி செய்து வந்துள்ளார். அவருக்கு சூரிய தோஷம் ஏற்பட்டுள்ளது. சூரிய தோஷத்தால் பாதிக்கப்பட்ட மன்னர் நாடு, வீடு, பேரு, மக்கள் என அனைத்தையும் இழந்து செழிப்பின்றி இருந்தார்.

மிகவும் அருமையான நிலைமைக்குச் சென்ற மன்னர் மிகப்பெரிய அச்சத்தில் சிக்கிக்கொண்டார். உடனே தனது குருவிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டார். அப்போது சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்தால் உனக்கு அனைத்து சிக்கல்களும் நீங்கும் என குரு கூறியுள்ளார்.

இதன் காரணமாக வில்வ பணமாக இருந்த பகுதியை சீரமைத்து அங்கே கோயில் எழுப்பினார் மன்னர் வீர சோழீஸ்வரர். அதன் பின்னர் அவருடைய தோஷம் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel