Tuesday Temple: துண்டு துண்டாக சிதறிய பார்வதி தேவி.. பூமி வந்த சிவபெருமான்.. இடம் காட்டிய நாகம்
Tuesday Temple: அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காளத்தீஸ்வரர் தினமும் தாயார் ஞானாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Tuesday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டிருக்க கூடியவர் சிவபெருமான். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
மனிதர்கள் உருவான காலத்திற்கு முன்பே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. சிலம்பு மூர்த்தி ஆக இன்றுவரை சிவபெருமான் மக்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடில்லை.
சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் உள்ளிட்ட அனைத்து மன்னர்களுக்கும் சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வந்துள்ளார். மண்ணுக்காக ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை சோழர்களும் பாண்டியர்களும் கட்டிவைத்து சென்றுள்ளனர்.
அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன சில கோவில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அனைத்து கோயில்களும் கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காளத்தீஸ்வரர் தினமும் தாயார் ஞானாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
திருவண்ணாமலை கோயிலில் இருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரரை ராகு கேது வழிபட்டு திரும்பி வந்துள்ளனர். அன்றைய நேரம் இரவு நேரமாக இருந்த காரணத்தினால் அவர்கள் அங்கேயே தங்கி சிவபெருமானை வழிபட்டுள்ளனர். அதனை வெளிப்படுத்துவதன் காரணமாகவே இந்த திருக்கோயிலில் நின்ற காலத்தில் ராகு மற்றும் கேது ஒருவரின் பின் ஒருவராக காட்சி கொடுத்து வருகின்றனர். இந்த திருக்கோயிலில் நவகிரகங்களும் தனித்தனியாக அமைந்து காட்சி கொடுத்து வருகின்றனர். நாகம் ஒன்று இந்த திருக்கோயிலை அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய நந்தி தேவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வம் மற்றும் செழிப்பு உங்கள் வீட்டில் சேரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
சிவபெருமானுக்கு மரியாதை கொடுக்காமல் பார்வதி தேவி அவருடைய தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற பார்வதி தேவியை அவருடைய தந்தையார் அவமானப்படுத்தி உள்ளார். இதனால் அங்கேயே பார்வதி தேவி பிராண தியாகம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிவபெருமான் தனது அம்சமாக விளங்கி வரும் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அளிக்கச் சொன்னார். அதன் பின்னர் பார்வதி தேவியின் திருமேனியை சுமந்தபடி உன்மத்த நடனம் செய்தார் சிவபெருமான்.
இதன் காரணமாக பார்வதி தேவியின் உடல் பாகங்கள் அனைத்தும் பூமியில் ஆங்காங்கே சிதறி விழுந்தன. அந்த இடங்களில் பார்வதி தேவியின் சக்தி பீடங்களாக மாறினார். இதன் காரணமாக பூமிக்கு வந்து யோகம் செய்ய சிவபெருமான் யோசித்துள்ளார்.
அதற்கு ஏற்ற இடத்தை பூமியில் சிவபெருமான் தேர்வு செய்ய தனது கழுத்தில் இருந்த நாசத்தை அனுப்பி அடையாளம் காட்ட கூறினார். அந்த நாகம் ஐந்து இடங்களை காட்டியது அதில் முதலில் காட்டிய இடம் தான் காலகஸ்தி. இரண்டாவது இடம் தான் காட்டாங்குளத்தூர் மூன்றாவது இடம் திருநாகேஸ்வரம், நான்காவது திருப்பாம்புரம், ஐந்தாவது கீழப்பெரும்பள்ளம்.
சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார் அதிக சக்தி கொண்ட இவரை வழிபட்டு வந்தால் அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.