Monday Temple: வேண்டிக்கொண்ட நீலகண்ட நாயனார்.. அருள் கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த நீலகண்டேஸ்வரர்-history of thiruvarur district arulmiku neelakandeswarar temple can be found here - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Monday Temple: வேண்டிக்கொண்ட நீலகண்ட நாயனார்.. அருள் கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த நீலகண்டேஸ்வரர்

Monday Temple: வேண்டிக்கொண்ட நீலகண்ட நாயனார்.. அருள் கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த நீலகண்டேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 30, 2024 06:00 AM IST

Monday Temple: அந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நீலகண்டேஸ்வரர் எனவும் தாயார் மங்கலாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Monday Temple: வேண்டிக்கொண்ட நீலகண்ட நாயனார்.. அருள் கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த நீலகண்டேஸ்வரர்
Monday Temple: வேண்டிக்கொண்ட நீலகண்ட நாயனார்.. அருள் கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த நீலகண்டேஸ்வரர்

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இன்று வரை நடத்தப்பட்ட வருகின்றன. மனிதர் இனம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிகப் பெரிய கோயில்கள் சிவபெருமானுக்கு கட்டமைக்கப்பட்டு பிரம்மாண்டத்தின் குறியீடாக திகழ்ந்து வருகின்றன. மனிதர்கள் பிறப்பதற்கு முன்பாகவே உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அந்த அளவிற்கு சிவபெருமான் இந்தியாவில் மனிதர்களின் ஆதி கடவுளாக திகழ்ந்து வருகின்றார்.

குறிப்பாக இந்தியாவில் தெற்கு பகுதியில் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமானை வணங்குவதில் எந்த குறையும் வைத்தது கிடையாது. தங்களது கலைத்திறன் மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். 

அப்படிப்பட்ட கோயில்கள் இன்று வரை சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன. அந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நீலகண்டேஸ்வரர் எனவும் தாயார் மங்கலாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திரு நீலகண்டேஸ்வரராக மேற்கு முகம் நோக்கி அருள் பாதிப்பது மிகவும் சிறப்பாகும். அம்பாள் மங்களாம்பிகை கிழக்கு நோக்கி அழகு தோற்றத்தில் இந்த கோயிலில் காட்சி கொடுத்து வருகிறார் இது பஞ்சமூர்த்தி தளமாக திகழ்ந்து வருகிறது மண்பாண்டங்கள் செய்யக்கூடிய இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றன.

கேட்டவர்களுக்கு கேட்ட வரத்தை அள்ளிக் கொடுக்கும் நாயகனாக நீலகண்டேஸ்வரர் திகழ்ந்து வருகிறார். வெறும் பக்தர்கள் மட்டுமல்லாது இந்த கோயிலுக்கு சிவன் அடியார்கள் மற்றும் சித்தர்கள் உள்ளிட்டவர்கள் அனைவரும் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

தல வரலாறு

63 நாயன்மார்களின் ஒருவராக திகழ்ந்து வரக்கூடியவர் திருநீலகண்ட நாயனார். திருவாரூர் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய தியாகராஜரை ஒரு முறை இவர் தரிசனம் செய்ய வந்துள்ளார். ஒருமுறை பங்குனி உத்திர திருநாளில் தரிசனம் செய்த பிறகு இதே ஊரில் தங்களிடம் அருள் காட்சி பெற்றதன் அடையாளமாக ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என நீலகண்ட நாயனார் விரும்பியுள்ளார். அவ்வாறு எனக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்யலாம் என சிவபெருமான் அருளியுள்ளார். அப்படி உருவாக்கப்பட்ட கோயில்தான் இந்த நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். அதன் காரணமாகவே இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நீலகண்டேஸ்வரர் என்று திருநாமத்தை பெற்றார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்