Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு.. கிரிவலத்தின் முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை!-tiruvannamalai girivalam time notification and importance and benefits of girivalam and mode of worship - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு.. கிரிவலத்தின் முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை!

Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு.. கிரிவலத்தின் முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை!

Marimuthu M HT Tamil
Aug 18, 2024 10:03 AM IST

Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு மற்றும் கிரிவலத்தின் முக்கியத்துவம், கிரிவலத்தின் பலன்கள், வழிபடும் முறை குறித்து அறிவோம்.

Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு, முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை
Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு, முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை

ஆவணி மாத பவுர்ணமியின் சிறப்புகள்:

ஆவணி மாதப் பவுர்ணமியன்று கோயில்களுக்குச் சென்று, புனித நதியில் குளித்துவிட்டு, விரதம் பிடித்து சிவபெருமானை வழிபடுவர். அந்த வகையில், தற்போது வரும் ஆவணி மாதப் பவுர்ணமி, தட்சிணாயன காலப் பவுர்ணமி எனப்படுகிறது. இந்த ஆவணி மாதப் பவுர்ணமியில், ஆவணி அவிட்டம், ரக்‌ஷா பந்தன் ஆகிய சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

திருவண்ணாமலையின் முக்கியத்துவம்:

பவுர்ணமி கிரிவலம் என்றாலே அதில் திருவண்ணாமலை கிரிவலம் தான் மிக உயர்ந்தது. இந்த பவுர்ணமி நன்னாளில் உலகை ஆளும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும், சத்ய நாராயணரையும் வழிபட உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் மலை மீது அமர்ந்திருக்கும் சிவஸ்தலங்களைச் சுற்றிப் பலரும் கிரிவலம் வந்து, சிவனை வழிபட்டு வேண்டியதைப் பெறுவர். அப்படி, திருவண்ணாமலையிலும் பிறந்திருக்கும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எண்ணற்ற பக்தர்கள் ஆலயத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணி மாத பவுர்ணமி 2024 திருவண்ணாமலை கிரிவலத்திற்கான உகந்த நேரம்:

எனவே, அதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம், ஆவணி மாத பவுர்ணமி திதி நேரத்தைக் கணித்துச் சொல்லியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2:58 மணிக்குத் தொடங்கி, மறுநாள் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:02 மணிக்கு முடிகிறது. எனவே, திருவண்ணாமலை வரும் பக்தர்கள், இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலத்தின் பலன்கள்:

இந்த நாளில் நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய திருத்தலமான திருவண்ணாமலையில் மலையை, சிவனாக நினைத்து வழிபடுவதால், கைலாயத்தை வலம்வருவதற்கு இணையாக இதனை கிரிவலம் வந்தால் நிறைய பலன்கள் கிடைக்கும். இந்நிலையில், இந்த நாளில் விரதம் இருந்து திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால், உங்களது பாவம் குறையும். நெடுநாட்களாக வேண்டி கிடைக்காதது கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆவணி மாதப் பவுர்ணமியின் முக்கியத்துவம் மற்றும் வழிபடும் முறை:

12 மாதங்களும் 12 விதமான நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். அந்த வகையில், ஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. திருவோணம் சந்திரனுக்கு உரியது. மேலும், பவுர்ணமி வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கட்கிழமை, சந்திரனுக்கு ஏற்ற நாள். எனவே, திங்கள் கிழமையில் சந்திரன், உமையவள் மற்றும் சிவபெருமானை வழிபடலாம். இந்த நாளில் இயலாதவர்களுக்கு அன்னதானம் நல்கி, புண்ணியம் பெறலாம்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்