Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகள்..சிவன் - பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? யுத்தத்தை நோக்கி கதை
Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகளை உடைத்தெரிந்து, சிவன் - பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? சிவமைந்தனுக்கும், தாரகாசுரனுக்கு பிறக்கப் போகும் மகன்களுக்கு நிகழ இருக்கும் யுத்தத்தை நோக்கி கதைக்களம் நகரப்போகிறது என்பது சிவசக்தி திருவிளையாடல் கதையின் இந்த வார எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.

Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகள்..சிவன் - பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? யுத்தத்தை நோக்கி கதை
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு சிவசக்தி திருவிளையாடல் என்கிற ஆன்மிக புராண தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த வெற்றிகரமான தொடர் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
சிவசக்தி திருவிளையாடல் இந்த வார எபிசோடு சுருக்கம்
இந்தத் தொடரில் வரும் வாரம் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற உள்ளது. அசுரர்களின் பல்வேறு சூழ்ச்சிகளை உடைத்தெரிந்து இந்தத் திருமணம் நடந்தாலும், அசுரகுல அரசன் தாரகாசுரன், சிவனிடம் இருந்து சிவதனுசு-யையும், அமரனாக வாழ்வதற்கான வரத்தையும் சிவனிடமே எப்படி பெற்றான்? என்ற சுவாரஸ்யமான காட்சிகள் தொடரை மேலும் விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது.