தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vakra Luck: குரு வக்ரமாக மாறுகிறார்.. பண மழையில் நனையும் 3 ராசிகள்

Guru Vakra Luck: குரு வக்ரமாக மாறுகிறார்.. பண மழையில் நனையும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 04, 2023 10:51 AM IST

குரு வக்ர பெயர்ச்சி அடைவதால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு வக்ர பெயர்ச்சி
குரு வக்ர பெயர்ச்சி

அந்த வகையில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் இன்று மாலை வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவானின் வக்ரநிலையால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. புதிய தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். திட்டம் தீட்டி செயல்பட்டால் அனைத்தும் நடக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். உங்கள் ராசியில் 9 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். அதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலை அடையப் போகிறார் அதன் மூலம் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் தற்போது நிறைவேறும். முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உண்டாகும். பயணங்கள் வெற்றி பெறும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென நல்ல செய்தி உங்களை தேடி வரும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொட்டிக் கொடுக்கப் போகின்றார். இந்த குரு வக்கிரப் பயிற்சி உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் உங்களது அந்தஸ்து அதிகரிக்கும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் வெற்றிபெறும். தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்தால் அதிக வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்