தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Villain Rasis: இயல்பாகவே எதிர்மறை சிந்தனை கொண்ட 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Villain Rasis: இயல்பாகவே எதிர்மறை சிந்தனை கொண்ட 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 28, 2023 12:03 PM IST

இந்த நான்கு ராசிக்காரர்கள் எப்போதும் வில்லத்தனமாக சிந்திப்பார்கள்

ராசி பலன்
ராசி பலன்

பல்வேறு விதமான குண நலன்களை பெற்றிருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களை ஆட்சி செய்து வரும் கிரகங்கள் தான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சிறந்த எதிரியாக விளங்கக்கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

நீங்கள் செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். தைரியம் மற்றும் அச்சமின்மை என்பது உங்களுக்கு இயல்பாகவே இருக்கும். இது மற்றவர்களிடத்தில் உங்களை எதிரியாக காட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு சிக்கலை நேருக்கு நேர் எதிர் கொண்டு மோதல்களில் ஈடுபடக் கூடிய மன தைரியம் கொண்டவர்கள் நீங்கள். அதனால் நன்மைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள் என மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு உங்களது செயல் இருக்கும் என கூறப்படுகிறது.

விருச்சிக ராசி

 

இந்த ராசிக்காரர்கள் எப்போதும் வில்லத்தனமான சிந்தனை கொண்டவர்களோடு தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. புதிரான மனப்பான்மை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இது இவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மகர ராசி

 

சனிபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். ஆழமான லட்சியம் மற்றும் உறுதியான கொள்கை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். இது உங்கள் மனதில் சில நேரங்களில் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கி உங்களை எதிரிகளாக மற்றவர்களிடம் காட்டும் என கூறப்படுகிறது. சுயநலத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து மிகவும் மோசமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

 

வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளை கொண்டவர்கள் நீங்கள். பொதுவாக சிந்தனை ஒரு கூட்டத்தில் இருக்கும் பொழுது நீங்கள் மட்டும் தனியாக சிந்தித்து அந்த இடத்தையே உங்களுக்கு எதிரியாக மாற்றி விடுவீர்கள். மற்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் சுயநலத்திற்காக சிந்திக்கும் தன்மை இயல்பிலேயே உங்களுக்கு இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்