தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: செவ்வாய் பகவான் மாறப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Lord Mars: செவ்வாய் பகவான் மாறப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 17, 2023 11:40 AM IST

செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் டிசம்பர் 27ஆம் தேதி என்று குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் பயணம் செய்ய உள்ளார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் எப்போதும் நல்ல பலன்களை கொடுக்கும்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் தனுசு ராசிக்குள் நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தொழில் ரீதியான முன்னேற்றங்கள் கட்டாயம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் உண்டாக வாய்ப்பு உள்ளது. கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். நீங்கள் தொடங்க நினைக்கும் அனைத்தும் வெற்றியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். ஏனென்றால் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். தன்னம்பிக்கை அதிகரிக்கும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மற்றவர்களிடத்தில் பாராட்டுக்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்