தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bhagavan Dosam: சூரிய பகவானின் உக்கிர தோஷம்.. ஒரு பிடி கோதுமையும்.. 7 ஞாயிறும் போதுமாம்!

Bhagavan Dosam: சூரிய பகவானின் உக்கிர தோஷம்.. ஒரு பிடி கோதுமையும்.. 7 ஞாயிறும் போதுமாம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 23, 2023 12:45 PM IST

கடுமையான சிரமங்களை தரும் சூர்ய தோஷம் நீங்க, வீட்டிலேயே எளிய பரிகாரங்கள் செய்யலாம் என்கிறார்கள். இதோ அந்த பரிகாரம்.

சூரிய பகவானின் தோஷம் நீக்கும் பரிகாரம்
சூரிய பகவானின் தோஷம் நீக்கும் பரிகாரம்

குறிப்பாக ஆரோக்கியத் தடையை தரும். ஏதாவது ஒரு நோயை நமக்கு கொடுத்துக் கொண்டு, நம்மை முடக்கி வைத்துக் கொண்டே இருக்கும். அதனால் சூரிய தோஷம் கட்டாயம் நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கிய தோஷமாகும். 

சூரியபகவானின் முழு பார்வையும் நமக்கு கிடைக்க வேண்டும். சூரிய பார்வை மறைக்கப்பட்டிருந்தால், குறைபாடு இருந்தால் அதை சரிசெய்ய சித்தர்கள் கூறியதாக கூறப்படும் ஒரு வழி இருக்கிறது.

அதற்கு பெரிய பொருட்கள் தேவையில்லை, கோதுமை இருந்தால் போதும், சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ய முடியும் என்கிறார்கள். சூரியனின் தானியம் கோதுமை. அத்தோடு நல்லெண்ணெய், வில்வம், துளசி எடுத்துக் கொள்ளுங்கள். 100 நல்லெண்ணெயில் பச்சையான ஒரு கை கோதுமையை போட வேண்டும். 

சிறிது நேரம் கழித்து வில்வம் இலை, துளசி போட்டு காயச்ச வேண்டும். அந்த எண்ணெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும். சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்று கிழமை தான். எனவே ஞாயிற்று கிழமையில் இதை செய்வது நன்றாக இருக்கும். 

தயார் செய்த எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து உச்சந் தலையில் வைத்துக் கொண்டு, சூரியனை நோக்கி வெளியில் 3 நிமிடங்கள் நிற்க வேண்டும். அந்த நேரத்தில் ‘ஓம் சூர்யாயா எம் வசி வசி.. ஓம் சூர்யாயா உம் வசி வசி.. ஓம் சூர்யாயா வம் வசி வசி..’ என்கிற மந்திரத்தை கூற வேண்டும். எம், உம், வம் என்கிற இந்த மூன்றும் அதில் இடம் பெறும். 

இந்த மந்திரத்தை 108 முறை சொன்னால் சிறப்பாக இருக்கும். சொல்ல முடியவில்லை என்றால் 27 முறை சொன்னால் கூட போதும். ஆனால், 108 முறை சொல்வது மிக சிறப்பாக இருக்கும் என்கிறார்கள். 7 ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை மந்திரத்துடன் செய்தால், சூரிய தோஷம் நிவர்த்தியாகும்.

அதன் பலனை நீங்கள் உடனே காணலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள். சூரிய தோஷம் இருந்தால் மட்டுமல்ல, சூரியனின் சக்தி கிடைக்க விரும்புவோரும் இதை செய்யலாம் என்கிறார்கள். விட்டமின் டி இதில் கிடைப்பதால் அறிவியல்பூர்வமாகவும் இது பயனுள்ளது என்கிறார்கள்.

இந்த முறையை நாம் குளிக்கும் முன், காலையிலேயே செய்வது மிகவும் நல்லது என்கிறார்கள். மனதார வழிபட்டு இந்த நேர்த்திகடனை செய்யவும்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்