பிரதிஷ்டை செய்த வசிஷ்ட முனிவர்.. மண்ணில் புதைந்த லிங்கம்.. கனவில் தோன்றி காட்சி கொடுத்த ஆட்கொண்டீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிரதிஷ்டை செய்த வசிஷ்ட முனிவர்.. மண்ணில் புதைந்த லிங்கம்.. கனவில் தோன்றி காட்சி கொடுத்த ஆட்கொண்டீஸ்வரர்

பிரதிஷ்டை செய்த வசிஷ்ட முனிவர்.. மண்ணில் புதைந்த லிங்கம்.. கனவில் தோன்றி காட்சி கொடுத்த ஆட்கொண்டீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 10, 2024 06:00 AM IST

Aatkondeshwarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஆட்கொண்டேஸ்வரர் எனவும் தாயார் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதிஷ்டை செய்த வசிஷ்ட முனிவர்.. மண்ணில் புதைந்த லிங்கம்.. கனவில் தோன்றி காட்சி கொடுத்த ஆட்கொண்டீஸ்வரர்
பிரதிஷ்டை செய்த வசிஷ்ட முனிவர்.. மண்ணில் புதைந்த லிங்கம்.. கனவில் தோன்றி காட்சி கொடுத்த ஆட்கொண்டீஸ்வரர்

மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.

பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் எதிரி நாடுகளாக இருந்தாலும் அவர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். போட்டி போட்டுக் கொண்டு கலைநயத்தோடு கோவில் கட்டுவதையே ஒரு சேவையாக செய்து வந்துள்ளன.

அதன் காரணமாகவே நமது தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு அதன் வழிபாடுகள் இன்று வரை சீராக நடந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் யாரால் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஆட்கொண்டேஸ்வரர் எனவும் தாயார் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

அனைத்து சிவபெருமான் கோயில்களிலும் நடத்தப்படும் வழிபாடுகள் இங்கும் முழுமையாக நடத்தப்படுகிறது. குறிப்பாக கருவறையில் லிங்கத்தின் கீழே இருக்கக்கூடிய ஆவுடையார் தாமரை மலர் போல அமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சிறப்பாகும்.

குறிப்பாக இங்கு சிவபெருமான் தன் நெற்றியில் நெற்றிக்கண்ணோடு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக அனைத்து கோயில்களிலும் உற்சவர் சிலைகள் அமர்ந்து கோளத்தில் வடிவமைப்பது வழக்கம். ஆனால் இங்கு உற்சவர் சந்திரசேகர் மற்றும் அம்பாள் இருவரும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். சூலத்தின் மத்தியில் அமர்ந்து அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்தார்.

இந்த கோயிலில் வீற்று இருக்கக்கூடிய விநாயகர் மகா கணபதி என்ற திருநாமத்தோடு அருள் பாலித்து வருகிறார். குறிப்பாக இந்த கோயிலில் அதிகாரணைக்கு பிரதோஷ நந்தி என்ற இரண்டு நதிகள் ஒரே மண்டபத்தில் அருகருகில் அமர்ந்து காட்சி கொடுத்து வருகின்றன. இந்த நந்திகளை வழங்கினால் வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக வசிஷ்ட முனிவர் சிவ யாத்திரை மேற்கொண்டு வந்தார். நதிக்கரை பக்கமாக செல்லும் இடமெல்லாம் நதிக்கரையில் அமர்ந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதை வசிஷ்ட முனிவர் வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் வசிஷ்டர முனிவர் பிரதிஷ்டை செய்த கோயில்களில் ஒன்றுதான் இந்த ஆட்கொண்டீஸ்வரர் லிங்கமாகும். இந்த லிங்கம் அந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மண்ணில் புதைந்து விட்டது.

அப்போது அதற்குப் பிறகு இந்த பகுதியில் வசித்து வந்த சிவனடியாரின் கனவில் சிவபெருமான் தோன்றி நான் வசிஷ்ட நதியின் தென்கரையில் மண்ணில் புதைந்து கிடக்கிறேன் என்னை தோண்டி எடுத்து கோயில் கட்டை ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். அப்படி கட்டப்பட்ட கோயில் தான் தற்போது நாம் காணும் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

Whats_app_banner