வரம் கேட்ட மண்டோதரி.. தொட்டுப் பார்த்த ராவணன்.. பாதுகாத்த மாணிக்கவாசகர்.. அருள்பாலித்த சிவபெருமான்
Mangalanatha Swamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்கள நாதர் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் மங்களநாதர் எனவும் தாயார் மங்களேஸ்வரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Mangalanatha Swamy: மன்னர்களுக்கெல்லாம் ஆதி கடவுள் ஆகவும், குலதெய்வம் ஆகவும் திகழ்ந்து வந்தவர் சிவபெருமான். கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகம் முழுவதும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
லிங்க வடிவில் உலகம் முழுவதும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வரலாற்று சரித்திர குறியீடாக கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பழமை வாய்ந்த கோயில்கள் இந்தியாவில் உள்ளன குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வானுயர காணப்படுகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்கள நாதர் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் மங்களநாதர் எனவும் தாயார் மங்களேஸ்வரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் சித்திரை மாதத்தில் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதை காண்பதற்காக சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் வந்து பங்கே இருப்பார்கள். இறைவன் சுயம்பு மூர்த்தியாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றியுள்ளார். அந்த மரம் இன்றும் இந்த கோயிலில் தல விருட்சமாக திகழ்ந்து வருகிறது.
இந்த கோயிலில் எங்கும் காண முடியாத மரகத நடராஜர் சிலை உள்ளது. குறிப்பாக மாணிக்கவாசருக்கு அருள் பாலித்து அவருக்கு லிங்க வடிவில் இருக்கும் படி சிவபெருமான் அருள் வழங்கினார். அதன் காரணமாக மாணிக்கவாசகர் இங்கு லிங்க வடிவில் காட்சி கொடுத்து வருகிறார்.
தடைபட்ட திருமண காரியங்கள் நிவர்த்தி அடைய வேண்டும் என்றால் தாயார் மங்களேஸ்வரியை வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்தது. ஏனென்றால் உலகத்திலேயே மிகப்பெரிய சிவபக்தனாக திகழ் பவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என அவர் அடம் பிடித்து வந்தார். இதன் காரணமாக சிவபெருமானை வழிபட்டார்.
இதுகுறித்து அறிந்த சிவபெருமான் தான் வைத்திருந்த வேத ஆகம நூலை முனிவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் மண்டோதரிக்கு காட்சி தர செல்கிறேன், மீண்டும் வரும் வரை இந்த வேத ஆகம நூல்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டுச் சென்றார்.
மண்டோதுரியின் முன்பு குழந்தை வடிவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். அப்போது அங்கு இருந்த ராவணன் குழந்தை வடிவில் வந்திருப்பது சிவபெருமான்தான் என அறிந்து கொண்டார். குழந்தையாக இருந்த சிவபெருமானை ராவணன் தொட்டுப் பார்த்தார்.
உடனே சிவபெருமான் அக்கினியாக மாறி ராவணனை சோதித்தார். அந்த அக்கினி உலகம் முழுவதும் பற்றி கொண்டு எறிந்தது. இதன் காரணமாக சிவபெருமான் முனிவர்களிடம் கொடுத்துச் சென்ற வேத ஆகம நூலும் ஆபத்து சூழ்ந்த நிலையில் இருந்தது. அதனைக் காப்பாற்ற வழியில்லாமல் முனிவர்கள் அனைவரும் சிவபெருமானுக்கு பயந்து கொண்டு அருகில் இருந்த தீர்த்தத்தில் குதித்து இறந்துவிட்டனர்.
அந்த தீர்த்தம் தான் அக்னி தீர்த்தமாக மாறியது. உடனே அங்கு இருந்த மாணிக்கவாசகர் அந்த வேத ஆகம நூல்களை தைரியமாக பாதுகாத்தார். அதன் பின்னர் மண்டோதரி,ராவணன் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என சிவபெருமான் அருள் பாலித்தார். மாணிக்கவாசகர் செய்த செயலை பாராட்டி லிங்க வடிவம் தந்து சிவபெருமான் கௌரவம் செய்தார். அதன் காரணமாகவே இந்த கோயிலில் மாணிக்கவாசகர் லிங்க வடிவில் காட்சி கொடுத்து வருகிறார்.