பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் ஜடா மகுட தீர்த்தம்.. ராமனின் தோஷத்தை போக்கிய சிவபெருமான்.. ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர்
Jadamaguda Theertha Easwarar:
Jadamaguda Theertha Easwarar: உலகமெங்கும் கோயில் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதி கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வந்துள்ளார்.
குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் வைத்திருக்கின்றார். தங்கள் மனித வாழ்க்கையை சிவபெருமானுக்காக ஒப்படைத்துவிட்டு அகோரிகளாகவும் சித்தர்கள் ஆகவும் பலர் வாழ்ந்து வந்த கதைகள் இன்று வரை இருந்து வருகிறது.
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. இந்த உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளன. அந்த கோயில்களில் இருக்கக்கூடிய பல கலை தொழில் நுட்பங்கள் தற்போது இருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு சவாலாக திகழ்ந்து வருகிறது.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டுப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சிவபெருமானை குலதெய்வமாக அந்த காலத்தில் வணங்கி வந்துள்ளனர். இது போன்ற எத்தனையோ கோவில்கள் வரலாற்றுச் சிறப்பை தன்வசம் வைத்து தமிழ்நாட்டில் காலம் காலமாக இருந்து வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ஜடா மகுட தீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம்தான் மிகவும் விசேஷமாகும் அந்த தீர்த்தம் ஜடா மகுட தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய ஜடா மகுட தீர்த்தத்தில் மகம் நட்சத்திரம் வரக்கூடிய அனைத்து நாட்களிலும் நீராடி வழிபட்டான் மகாமக குளத்தில் 12 மாமாங்கம் நீராடியதற்கு சமமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் தீர்த்தமாக இந்த ஜடா மகுட திருத்தம் விளங்கி வருகிறது.
இந்த தீர்த்தத்தின் நீராடிவிட்டு லிங்கம் மூர்த்திகளை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி புண்ணிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இன்றும் இந்த கோயிலில் தேவதைகள் மற்றும் சித்தர்கள் அனைவரும் அரூபமாக உலா வருவதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலில் அன்னதானம் செய்து வழிபட்டால் அவர்கள் அனைவரும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார்கள் என நம்பப்படுகிறது.
தல வரலாறு
ராவணனை வதம் செய்துவிட்டு ராமபிரான் சீதாவை மீட்டுக்கொண்டு வரும் வழியில் ராமேஸ்வரத்தில் தங்கினார். அப்போது அவரது சடை முடியில் அரக்கர்களின் ரத்தங்கள் தேங்கியிருந்தன. அப்போது அங்கே இருந்த தடாகத்தில் ராமபிரான் நீராடி தனது பிரம்மஹத்தி தோஷத்தை நீங்க பெற்றார். அதுவே ஜடா மகுட தீர்த்த குளமாக மாறியது.
வியாசரின் மகன் சுகர் பல யாகங்களையும் நடத்தி வேத மந்திரங்களை கூறி ஞானசக்திகளை பெறுவதற்காக முயற்சி செய்தார் ஆனால் அவருக்கு பல முயற்சிகள் செய்தும் கிடைக்கவில்லை. இதனால் வருத்தம் கொண்ட சுகர் வியாசரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே வியாசர் ராஜ மகரிஷியாக விளங்கிய ஜனகரிடம் சுகரை அனுப்பி வைத்தார்.
ஜனக மகரிஷி உனக்கு அனைத்து சகல சிவயோக சிட்டிகளும் வேண்டுமென்றால் ராமேஸ்வரத்தில் ராமபிரான் நீராடிய ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் உனக்கு அனைத்தும் கிடைக்கும் என கூறினார். அதன்படி அங்கு சென்று சுகர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி தியானலிங்க மூர்த்தியாக திகழ்ந்துவரும் ராமநாத சுவாமியை வழிபட்டார். அதற்குப் பிறகு அவருக்கு ஞானம் கிடைத்தது. இந்த தீர்த்தத்தில் வழிபட்டால் மோகம், குரோதம், காமம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.