தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sabarimala Ayyappa Temple: ஆனி மாத பூஜை..சபரிமலை கோயில் நடை திறப்பு எப்போது?

Sabarimala Ayyappa Temple: ஆனி மாத பூஜை..சபரிமலை கோயில் நடை திறப்பு எப்போது?

Karthikeyan S HT Tamil
Jun 10, 2023 08:30 AM IST

Sabarimala Ayyapa Temple: ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போதும் முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.

அதன் பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

இதையடுத்து வரும் 20 ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன் பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்