தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Parigara Kovilgal : ‘பலன் தரும் பரிகார தலங்கள்’ ஆயுள் பலம், ஆரோக்கிய வாழ்வு, ஏதிரி பயம் போக இங்கெல்லாம் செல்ல வேண்டும்!

Parigara Kovilgal : ‘பலன் தரும் பரிகார தலங்கள்’ ஆயுள் பலம், ஆரோக்கிய வாழ்வு, ஏதிரி பயம் போக இங்கெல்லாம் செல்ல வேண்டும்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2023 09:08 AM IST

Remedial Temples : பின்வரும் கோயில்களில், பிராத்தனை செய்ய வேண்டியதைப் பற்றி, அங்கு சென்று வேண்டினாலே, தேவையான அனைத்துப் பலன்களையும் நாம் பெறலாம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தீர்வு. அதுபோல், ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொன்றுக்கு பரிகாரமாக அமையும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அதை நாம் தெரிந்துகொள்ளாமல், கோயில்களுக்குச் சென்று வேண்டுகின்றோம். பின்னர், கடவுள் நமக்குத் தரவில்லை. அதனால், அவர் கடவுள் இல்லை என்று குறை கூறுகின்றோம்.

பின்வரும் கோயில்களில், பிராத்தனை செய்ய வேண்டியதைப் பற்றி, அங்கு சென்று வேண்டினாலே, தேவையான அனைத்துப் பலன்களையும் நாம் பெறலாம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தீர்வு. அதுபோல், ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொன்றுக்கு பரிகாரமாக அமையும்.

அந்த வகையில் ஆயுள் பலம், ஆரோக்கிய வாழ்வு, எதிரி பயம் நீங்க கீழ்கண்ட கோயில்களில் சென்று தரிசனம் செய்யுங்கள்.

ஆயுள் பலம் அருளும் பரிகார கோயில்கள்!

1. பாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மிகநாத சாமி கோயில், திருவெற்றியூர்.

2. அமிர்தகடேஸ்வரர் கோயில், திருக்கடையூர்.

3. எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் – பரமக்குடி.

4. காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்.

5. சித்திரகுப்த சாமி கோயில், காஞ்சிபுரம்.

6. தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி.

7. ஞீலிவனேஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி.

8. வாஞ்சிநாத சாமி கோயில், வாஞ்சியம்.

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார கோயில்கள்!

1. தன்வந்திரி கோயில், ராமநாதபுரம், கோவை.

2. பவஒளஷதீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.

3. பிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில், குணசீலம்.

4. மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்.

5. மகா மாரியம்மன் கோயில், வலங்கைமான்.

6. வைத்தியநாதசுவாமி கோயில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

7. வைத்தியநாதசுவாமி கோயில், வைத்தீஸ்வரன்கோவில்.

எதிரி பயம் போக்கும் பரிகார கோயில்கள்!

1. அங்காளம்மன் கோயில், மேல்மலையனூர்.

2. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், கல்மண்டபம் ராயபுரம்-சென்னை.

3. காலபைரவர் கோயில், கல்லுக்குறிக்கி-கிருஷ்ணகிரி.

4. காளமேகப்பெருமாள் கோயில், திருமோகூர்.

5. காளிகாம்பாள் கோயில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

6. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோயில், அதியமான்கோட்டை.

7. தில்லை காளியம்மன் கோயில், சிதம்பரம்.

8. பிரத்யங்கரா தேவி கோயில், அய்யாவாடி, கும்பகோணம்.

9. மாசாணியம்மன் கோயில், ஆணைமலை.

10. முனியப்பன் கோயில், பி.அக்ரஹாரம்-தர்மபுரி.

11. ரேணுகாம்பாள் கோயில், படவேடு.

12. வெட்டுடையார் காளியம்மன் கோயில், கொல்லங்குடி.

WhatsApp channel

டாபிக்ஸ்