தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Foreign Yoga Rasis: வெளிநாடுகள் செல்லும் யோகம் கொண்ட ராசிகள்

Foreign Yoga Rasis: வெளிநாடுகள் செல்லும் யோகம் கொண்ட ராசிகள்

Marimuthu M HT Tamil
Sep 16, 2023 11:40 AM IST

நம்மில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகவேண்டும் என்ற ஆசையுடன் இருப்போம். என்ன தான் முயற்சித்தாலும் நமது ஜாதக கட்டங்களே அவற்றைத் தீர்மானிப்பதாக சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை என்ன சொல்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் யாருக்கு உண்டு
வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் யாருக்கு உண்டு

மேஷ ராசி: 2023 மார்ச் மாதம் மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகியுள்ளதால், மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தைச் சார்ந்தவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்தால் நிச்சயம், வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். 

ரிஷப ராசி: ரிஷபராசிக்கு 12ஆம் இடத்தில் குரு பகவானும் ராகுபகவானும் இருக்கிறது.  குருபகவான் ஜீவகாருண்யன். அவர் ரிஷப ராசிக்கு 12ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு கண்டிப்பாக வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறது.   

கடக ராசி: கடக ராசி மற்றும் கடக லக்னக்காரருக்கு,2023ஆம் ஆண்டு முழுக்கவே 10ஆம் இடத்தில் ராகு கேது சேர்க்கை இருக்கப்போகிறது.10ஆம் பாகம் என்றாலே, தொழில் ஸ்தானம். எனவே, இந்த செப்டம்பர் இறுதிக்குள் வெளிநாடு செல்லும்யோகம் உள்ளது. மேலும் அங்கு நல்ல முன்னேற்றம் அடையும் சூழலும் கடக ராசி மற்றும் கடக லக்னகாரர்களுக்கு உள்ளது.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்கள், குருவுக்கு பாக்ய ஸ்தானத்தில் இருக்கின்றனர். இதனால், சிம்மராசிக்காரர்கள் மற்றும் சிம்ம லக்னக் காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் நிச்சயம் உண்டு. குறிப்பாக, இவர்கள் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் கிட்டும். ஆன்மிக யாத்திரையாக தூரதேசம் செல்லவும் வாய்ப்பு வந்துள்ளது. 

தனுசு ராசி: 5ஆம் பாகத்தைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என அழைப்பர். 5ஆம் வீட்டில் குருபகவான், ராகு பகவான் என இருவரும் உள்ளனர். ராகு பெயர்ச்சிக்குப் பின் கூட, 4ஆம் வீட்டுக்கு வரும் ராகுவினால் தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும்.

மகர ராசி: மகர ராசிக்கு குருபகவான் 4ஆம் இடத்தில் வருவதால், வெளிநாடு செல்ல மகர ராசி மற்றும் மகர லக்னகாரர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும்.

நன்றி: ஜோதிடர் சிம்மா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்