தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pariharam: திடீர் பண வரவுக்கு இந்த பரிகாரத்தை செய்தால் போதும்!

Pariharam: திடீர் பண வரவுக்கு இந்த பரிகாரத்தை செய்தால் போதும்!

Manigandan K T HT Tamil
Aug 29, 2023 10:30 AM IST

சந்திரன் 27 நட்சத்திரங்களிலும் தினமும் பயணிக்கக் கூடியவர். ஒவ்வொரு நட்சத்திரத்திலும் அவர் பயணிக்கும்போது ஒவ்வொரு விதமான பலன் கொடுக்கும்.

விளக்கு
விளக்கு (Pixabay)

இந்த பரிகாரத்தை 3 நாட்கள் செய்துவந்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அந்தப் பரிகாரத்தின் பெயர் மிளகுப் பரிகாரம்.

அதை எப்படி செய்வது என பார்ப்போம். வாழ்க்கையில் விரக்தியுடன் இருக்கிறீர்களா? வாழ்க்கை இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன செய்வது? என யோசிக்கிறீர்களா? அப்போது இதை செய்யுங்கள்.

நவ கிரஹ தோஷங்கள் இருக்கிறது. அதை எப்படி கண்டறிவது என தெரிந்து கொள்வோம்.

சந்திரன், புதன், சுக்ரன், குரு ஆகிய 4 பேரும் சுபர்கள். ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் இந்த ஐவரும் பாவிகள்.

ஒரு ஜாதகத்தில் இந்த ஐவரின் சாரத்தில் மற்ற கிரஹங்கள் அமர்ந்தால், இந்த கிரஹங்கள் பலம் இழந்துவிடும்.

யாருடைய சாரத்தில் அந்த கிரஹங்கள் இருக்கிறதோ அதனுடைய பலன்களைத்தான் அவர்கள் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். நவகிரஹ தோஷம் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்ய இந்த பரிகாரம் உதவும்.

27 மிளகு பரிகாரம் எப்படி செய்வது என பார்ப்போம்.

சாதாரணமாக கோயில்களில் துணியில் மிளகை முடிந்துவைத்து பரிகாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்த 27 மிளகையும், வெள்ளை, பச்சை, சிவப்பு, கருப்பு ஆகிய நிற துணிகளில் முடிந்து கொள்ளுங்கள்.

வெள்ளைத் துணியில் 27 மிளகை முடிந்தால் குடும்பப் பிரச்சனை தீரும். இதை ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணை ஊற்றி ஏற்றினால் இந்தப் பலன் நிச்சயம் உண்டு.

மஞ்சள் துணியில் 27 மிளகை வைத்து முடிந்து ஒரு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் உங்களுக்கு காசு பணம் நிறைய கிடைக்கும். இதை பைரவர் முன் ஏற்ற வேண்டும்.

கருப்பு துணியில் 27 மிளகை முடிந்து அகல் விளக்கில் ஏற்றினால் கோர்ட் கேஸ், தேவையற்ற பிரச்சனைகள் விலகும்.

இந்த விளக்குகள் எல்லாமே பைரவருக்கு தான் ஏற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இந்த விளக்கை ஏற்றினால் உங்களுக்கு முழு பலன் கிடைக்கும்.

சந்திரன் 27 நட்சத்திரங்களிலும் தினமும் பயணிக்கக் கூடியவர். ஒவ்வொரு நட்சத்திரத்திலும் அவர் பயணிக்கும்போது ஒவ்வொரு விதமான பலன் கொடுக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்