தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nellaiappar Temple: நெல்லையப்பர் கோயில் ஆனிப் திருவிழா கொடியேற்றம்.. தேரோட்டம் எப்போது?

Nellaiappar Temple: நெல்லையப்பர் கோயில் ஆனிப் திருவிழா கொடியேற்றம்.. தேரோட்டம் எப்போது?

Karthikeyan S HT Tamil
Jun 24, 2023 11:35 AM IST

Nellaiappar Temple: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில் ஆனிப் திருவிழா கொடியேற்றம்.
நெல்லையப்பர் கோயில் ஆனிப் திருவிழா கொடியேற்றம்.

இங்கு ஆண்டுதோறும் ஆனித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் நெல்லை மாநகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அத்தகைய சிறப்பு மிக்க ஆனிப்பெருந்திருவிழா இன்று (ஜூன் 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி இன்று காலை நெல்லையப்பர் - காந்திமதியம்மன் பூங்கோயில் சப்பரம் உள்வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. அப்போது நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

தொடர்ந்து திருவிழா நாட்களில் நாள்தோறும் காலை, மாலையில் சுமாமி - அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவுகள், பொம்மலாட்டம், பரதநாட்டியம், வீரமணி குழுவினரின் பக்தி இன்னிசை, ஞானசம்பந்தம் குழுவினரின் தமிழ் இனிமைப் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜூலை 2 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் படித்து இழுத்து தேரோட்டம் நடைபெற உள்ளது. தோரோட்டத்தையொட்டி தேர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரியுடன் வந்து, விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய ஐந்து தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். 

WhatsApp channel

டாபிக்ஸ்